விஜய் தேவரகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் தேவரகொண்டா
Vijay Deverakonda at NOTA pressmeet.jpg
நோட்டா திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா
பிறப்புவிஜய் சாய் தேவெரகொண்டா (இயற்பெயர்)
9 மே 1989 (1989-05-09) (அகவை 31)[1]
அச்சம்பேட், நகர்கர்னூல் மாவட்டம்
இருப்பிடம்ஹைதராபாத், தெலங்கானா
கல்விபி.காம்
படித்த கல்வி நிறுவனங்கள்பள்ளி :1. ஸ்ரீ சத்ய சாய் ஹையர் செகண்டரி ஸ்கூல் புட்டபர்த்தி.

2. லிட்டில் ஃபிளவர் ஜூனியர் ஸ்கூல் , ஹைதராபாத்.

கல்லூரி: பத்ருக்கா காலேஜ் ஆஃப் காமர்ஸ்,ஹைதராபாத்.
பணிதிரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011 – தற்போதும்

விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார்[2] , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் .

விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் . விஜய் தெலுங்கு சினிமா வின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அர்ஜுன் ரெட்டி (2017), மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) (2018), கீத கோவிந்தம் (2018), மற்றும் டாக்ஸிவாலா (2018), போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல். அர்ஜுன் ரெட்டிஇல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது.[3][4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

விஜய் தேவரகொண்டா தெலுங்கு தொலைக்காட்சி இயக்குனர், தேவரகொண்டா கோவர்தன் ராவ் மற்றும் தேவரகொண்டா மாதவி ஆகியோருக்கு தெலங்கானா மாநிலம், நகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை இல் பிறந்தார். பள்ளிப்படிப்பை 1. ஸ்ரீ சத்ய சாய் ஹையர் செகண்டரி ஸ்கூல், புட்டபர்த்தி. 2. லிட்டில் ஃபிளவர் ஜூனியர் ஸ்கூல் , ஹைதராபாத். ஆகிய பள்ளிகளில் முடித்தார். மற்றும் பத்ருக்கா காலேஜ் ஆஃப் காமர்ஸ்,ஹைதராபாத் ல் தனது பி.காம் பட்டப்படிப்பை முடித்தார்.

தொழில்[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் போராட்டம் (2011-2015)[தொகு]

2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை நுவ்விலாவில் நடித்ததன் மூலம் தேவரகொண்டா திரைப்பட துறையில் அறிமுகமானார், பின்னர் சேகர் கம்முலா வின் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்) படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். இந்த இரு படங்களும் வெற்றிகரமாக படங்களாக அமைந்தன ஆனால் தேவரகொண்டாவிற்கு இதன் மூலம் அங்கீகாரம் கிடைக்க வில்லை.[5]பின்னர், அவர் அந்த நேரத்தில் உதவி இயக்குனரான நாக் அஸ்வின் உடன் அறிமுகமானார், அது தேவரகொண்டா, நாக் அஸ்வினின் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான யெவடே சுப்பிரமணியம் படத்தில் நடிகர் நானி உடன் துணை வேடத்தில் நடிக்க காரணமாக அமைந்தது.[6]இப்படத்தை தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரான அஸ்வினி தத் மகள்கள் தயாரித்தனர். பிரியங்கா தத் அவரை ஆதரித்தார், படப்பிடிப்பு தொடங்கியதும், ஸ்வப்னா தத் அவரை தனது பட நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கி கையெழுத்திட்டார்.[7][8]இந்த படம் விமர்சன மற்றும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது, மேலும் தேவரகொண்டா தனது கற்பனையும் ஆற்றலும் வெளிப்படுத்தி திரைப்படத்தில் நடித்ததற்காகவும் பாராட்டுக்களைப் பெற்றார். இந்த படம் இறுதியாக அவருக்கு தெலுங்கு சினிமாவில் உ‌ரிய இடத்தை கொடுத்தது.

திருப்புமுனை மற்றும் வெற்றி (2015 - தற்போது வரை)[தொகு]

தருண் பாஸ்கர் தாசையம் இயக்கிய பெல்லி சூப்புலு படத்தில் விஜய் முதன்முறையாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.நடிகையாக ரிது வர்மா நடித்துள்ளார்.இருவரின் இயல்பான நடிப்பால் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[9]இது 64 வது தேசிய திரைப்பட விருதுகள் இல் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றது மற்றும் பிலிம்பேர் சிறந்த படத்திற்கான விருது - தெலுங்கு ஆகிய விருதும் கிடைத்தது. ஒரு சோம்பேறி சமையல்காரரின் யதார்த்தமான சித்தரிப்புக்காக அவர் பாராட்டுக்களைப் பெற்றார்.பின்னர் அவர் 2017 இல் துவாரகா என்ற மசாலா என்டர்டெய்னரில் நடித்தார். இது எதிர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அவரது அடுத்த படம் அர்ஜுன் ரெட்டி மிகவும் தைரியமாகவும் தீவிரமாகவும் கதை இருந்ததற்காக பாராட்டுகளையும் விமர்சனத்தையும் பெற்றது. சுய அழிவு, குறுகிய மனநிலை மற்றும் குடிப்பழக்கம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணராக விஜய் சித்தரிக்கப்பட்டது விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது, இது அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல விருதுகளை வென்று தந்தது.[10][11] அர்ஜுன் ரெட்டி ஐத் தொடர்ந்து "யே மந்திரம் வீசாவே" படம் 5 ஆண்டுகள் தாமதத்திற்கு பின் இறுதியாக வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களை வழங்கியது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை. பின்னர் அவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள வாழ்க்கை வரலாற்று காலப் படமான "மகாநடி" (தமிழில் நடிகையர் திலகம்) இல் நடித்தார். அதில் ஒரு கவர்ச்சியான மற்றும் எளிய புகைப்படக் கலைஞராக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் தேவரகொண்டாவின் அடுத்த வெளியீடு கீதா ஆர்ட்ஸ் ன் 'காதல் நகைச்சுவை' படமான கீத கோவிந்தம் (திரைப்படம்), இதில் அவர் ஒரு அப்பாவி மற்றும் பதட்டமான கல்லூரி பேராசிரியராக நடித்தார். அர்ஜுன் ரெட்டியில் ஆக்ரோஷமான பாத்திரத்திற்குப் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேவரகொண்டா பாராட்டு பெற்றார். இந்த படம் வனிக ரீதியாக வெற்றி பெற்றது. இது 5 கோடி பட்ஜெட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான அவரது அடுத்த படம், அரசியல் த்ரில்லர் நோட்டா, இயக்கியது இருமுகன் (திரைப்படம்) - புகழ் ஆனந்த் சங்கர். இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பேரழிவாக முடிந்தது.[12]அவரது அடுத்த படம் யு.வி. கிரியேஷன்ஸ் ன் 'சூப்பர்நேச்சுரல் காமெடி த்ரில்லர்' 'டாக்ஸிவாலா' 'இதில் விஜய் வைத்திருந்த காரை சுற்றி நடக்கும் கதையாக இது அமைந்தது, இதன் நடிகை மாளவிகா நாயர் ஆவார் . நவம்பர் 2018 நிலவரப்படி, விஜய் தற்போது மீண்டும் ராஷ்மிகா மந்தண்ணா உடன் 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்து உள்ளார் மேலும் கிராந்தி மாதவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல் லைட் ஆகியோருடன் இணைந்து நடித்து உள்ளார்.[13]அவர் அடுத்ததாக ஹீரோ என்ற தெலுங்கு படத்தில் (தமிழ் மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட உள்ளது)இரு சக்கர வாகன பந்தய வீரர் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை குற்றமே தண்டனை மற்றும் காக்கா முட்டை போன்ற படங்களின் இணை எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். படத்தில் மாளவிகா மோகனன் என்பவர் விஜய்யின் காதலி பாத்திரத்தில் தோன்றுகிறார்.[14][15] 2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் வரிசையில் 72 வது இடத்தைப் பிடித்து புகழ்பெற்றார்.[16]

திரைப்பட வரலாறு[தொகு]

Key
Films that have not yet been released இன்னும் வெளிவராத திரைப்படங்களை குறிக்கும்.

• அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் உள்ளன, மற்றவை வேறு வகையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வருடம் திரைப்படம் கதாபாத்திரம்(ங்கள்) குறிப்பு மேற்கோள்
2011 நுவ்விலா விஷ்ணு திரைப்பட அறிமுகம்
2012 லைஃப் இஸ் பியூட்டிஃபுல் அஜய் சிறப்பு தோற்றம்
2015 யெவடே சுப்ரமணியம் ரிஷி துணை வேடம்
2016 பெல்லி சூப்புலு பிரசாந்த் முதல் முன்னணி பாத்திரம்
2017 த்வாரகா எர்ரா ஸ்ரீனு / ஸ்ரீ கிருஷ்ணாநந்த ஸ்வாமி
2017 அர்ஜுன் ரெட்டி Dr. அர்ஜுன் ரெட்டி தேஷ்முக் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு [17]
2018 யே மந்த்ரம் வீசாவே நிகில் "நிக்கி"
2018 மஹாநடி விஜய் ஆண்டனி இருமொழி படம், தமிழ் யில்
"நடிகையர் திலகம் (திரைப்படம்)"
2018 கீத கோவிந்தம் விஜய் கோவிந்த்
2018 நோட்டா V. வருண் தமிழ் படம், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது
2018 ஈ நகரானிகி ஏமாயிந்தி சிறப்பு தோற்றம்
2018 டாக்ஸிவாலா ஷிவா
2019 டியர் காம்ரேட் பாபி கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது
2019 மீக்கு மாத்திரமே செபித்த சிறப்பு தோற்றம்
2020 வேர்ல்ட் பேமஸ் லவர் கெளதம்/ஸ்ரீனு
2020 ஹீரோ தயாரிப்பில்
2020 பயிட்டர் தயாரிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Shalini J. R. (9 May 2018). "Vijay Deverakonda celebrates his birth in a unique way". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/vijay-devarakonda-celebrates-his-birthday-in-a-unique-way/articleshow/64093479.cms. பார்த்த நாள்: 3 January 2019. 
  2. "‘This film came at the right time’". பார்த்த நாள் 30 August 2017.
  3. "Serial kisser Deverakonda is the Emraan Hashmi of Telugu cinema".
  4. Vyjayanthi Network (15 January 2015). "Yevade Subramanyam Theatrical Trailer - Nani, Malavika Nair". பார்த்த நாள் 30 August 2017.
  5. "NDTV Movies: Regional-Movies - Tamil Movies - Telugu Movies - Bengali Movies - Latest Movie News - Celebrity Gossip". பார்த்த நாள் 30 August 2017.
  6. "An eye for story". பார்த்த நாள் 30 August 2017.
  7. Vyjayanthi Network (21 February 2015). "Swapna Dutt Speech - Yevade Subramanyam Audio Launch Live - Nani, Malavika Nair". பார்த்த நாள் 30 August 2017.
  8. Radiokhushi. "'Evade Subramanyam' says Nani". பார்த்த நாள் 30 August 2017.
  9. "The Times Group". பார்த்த நாள் 30 August 2017.
  10. "Women's groups protest against 'Arjun Reddy' in Vijayawada, demand ban on film's screening". The News Minute. 2017-09-01. http://www.thenewsminute.com/article/womens-groups-protest-against-arjun-reddy-vijayawada-demand-ban-films-screening-67695. 
  11. "Arjun Reddy movie review: Intense, raw and unbelievably honest. 5 stars". Hindustan Times. 2017-08-26. http://www.hindustantimes.com/movie-reviews/arjun-reddy-movie-review-intense-raw-and-unbelievably-honest-5-stars/story-kSroTBJoqiGlTBavkdlVeK.html. 
  12. "'NOTA' Worldwide Closing Collections - Disaster" (in en-US). Telugu360.com. 2018-10-27. https://www.telugu360.com/nota-worldwide-closing-collections-disaster/. 
  13. https://www.deccanchronicle.com/entertainment/tollywood/211018/vijay-deverakondas-new-film-rolls-out.html
  14. "Vijay Devarakonda and Malavika Mohanan’s Hero gets launched; biker Rajini Krishnan to train the Hero!" (en).
  15. Coutinho, Natasha CoutinhoNatasha. "Malavika Mohanan and Vijay Devarakonda in Anand Annamalai's Hero" (en).
  16. "2018 Celebrity 100". பார்த்த நாள் 5 December 2018.
  17. "Winners list of Behindwoods Gold Medal Awards 2018" (17 June 2018).

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_தேவரகொண்டா&oldid=2975191" இருந்து மீள்விக்கப்பட்டது