பன்னாட்டு அருங்காட்சியக நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Daumier galerie tableaux.jpg

பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது அதற்குக்கிட்டவான நாட்களில் பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது.

வரலாறு[தொகு]

1977 ஆம் ஆண்டு முதன் முதலில் கொண்டாடப்பட்ட[1] நாள் தொடக்கம் பன்னாட்டு அருங்காட்சியக நாள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 20,000 அருங்காட்சியகங்கள் நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தன. 2010 ஆம் ஆண்டில் 98 நாடுகளும், 2011 இல் 100 நாடுகளும், 2012 இல் 129 நாடுகளில் இருந்து 30,000 அருங்காட்சியகங்கள் பங்குபற்றியிருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ICOM Website on IMD". icom.museum. மூல முகவரியிலிருந்து 2015-03-15 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]