உள்ளடக்கத்துக்குச் செல்

பொபி சான்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொபி சான்ட்ஸ்
Bobby Sands
Roibeard Gearóid Ó Seachnasaigh
இராணுவ இயக்கம் ஐரிஷ் குடியரசு இராணுவம்
பிறப்பு (1954-03-09)மார்ச்சு 9, 1954
பிறந்த இடம் அபொட்ஸ் குரொஸ், நியூடவுனபே, வட அயர்லாந்து,  ஐக்கிய இராச்சியம்
நோன்பு ஆரம்பம் மார்ச் 1, 1981
இறப்பு மே 5, 1981(1981-05-05) (அகவை 27)
நோன்பிருந்த நாட்கள் 66

ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands, மார்ச் 9, 1954மே 5, 1981), என்பவர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.

1981 இல் சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ். ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்[1][2]. இவருடன் சேர்ந்து 10 பேர் இந்த நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. பல தன்னார்வலர்கள் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர். சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் பலத்த குரலெழுப்பப்பட்டன[3].

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொபி_சான்ட்ஸ்&oldid=3947284" இலிருந்து மீள்விக்கப்பட்டது