பொதுநலவாய இங்கிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுநலவாய இங்கிலாந்து
Commonwealth of England

 

 

1649—1653
1659—1660

 

கொடி சின்னம்
குறிக்கோள்
Pax quæritur bello
(போரின் மூலம் அமைதி வேண்டப்படுகிறது)
தலைநகரம் லண்டன்
மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் குடியரசு
பாதுகாக்கப்படும் அரசுத் தலைவர்
 -  1653–1658 ஒலிவர் குரொம்வெல்
 -  1658–1659 ரிச்சார்ட் குரொம்வெல்
சட்டசபை எச்ச நாடாளுமன்றம்
வரலாறு
 -  அமைப்பு மே 19 1649
 -  அறிவிப்பு ஏப்ரல் 4 1660
Area 1,30,395 km² (50,346 sq mi)
நாணயம் பவுண் ஸ்டேர்லிங்

பொதுநலவாய இங்கிலாந்து (Commonwealth of England) என்பது 1649 முதல் 1660 வரை முதலில் இங்கிலாந்து (வேல்ஸ் உட்பட), பின்னர் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு குடியரசாகும். முதலாம் சார்ல்ஸ் மன்னன் ஜனவரி 30, 1649 இல் கொலை செய்யப்பட்ட பின்னர் மே 19, 1649 இல் ஒலிவர் குரொம்வெல்லின் தலைமையிலான எச்ச நாடாளுமன்றத்தினால் (Rump Parliament) இங்கிலாந்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.

குரொம்வெல் ஆட்சிக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தில் எஞ்சியிருந்ததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமேயாகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிற தொடர்ந்திருந்த நாடாளுமன்றத்தில் எஞ்சிய பகுதியான இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்" (The Rump) என்று அழைக்கப்பட்டது.

குரொம்வெல் முதலில் புதிய தேர்தல்கள் நடத்துவது குறித்துப் பேச்சுகள் நடத்துவதற்கு முயன்று தோல்வியடைந்ததும், எச்ச நாடாளுமன்றத்தை ஏப்ரல் 20, 1653 இல் கலைத்தார். அதன் பின்னர் இராணுவத்தினரின் துணையுடன் ஜூலை 4, 1653 முதல் டிசம்பர் 12, 1653 வரையில் Barebones Parliament என்ற பெயரில் ஆட்சி நடத்தினார். பின்னர் குரொம்வெல் டிசம்பர் 16, 1653 முதல் செப்டம்பர் 3, 1658 இல் அவரது இறப்பு வரை "ஆட்சிக் காவலர் பெருமகனார்" (Lord Protector) என்ற பெயரில் நேரடி ஆட்சி நடத்தினார். சீரான நிருவாக முறையை ஏற்படுத்தினார். கடுமையான சட்டங்கள் பலவற்றை சீர்ப்படுத்தினார். கல்வி கற்பதை ஆதரித்தார். யூதர்கள் இங்கிலாந்தில் மீண்டும் குடியமரவும் அவர்கள் தங்கள் சமயத்தைப் பயிலவும் அவர் அனுமதியளித்தார். அவரது இறப்பின் பின்னர் அவரது மகன் ரிச்சார்ட் குரொம்வெல் அரசுத் தலைவரானார்.

7 மாதங்கள் வரை ரிச்சார்ட் குரொம்வெல் ஆட்சியில் இருந்தார். மே 6, 1659 இல் இராணுவத்தினர் அவரைப் பதவியில் இருந்து அகற்றி மீண்டும் ஓர் எச்ச நாடாளுமன்றத்தை அமைத்தனர்.

ஏப்ரல் 4, 1660 இல் இரண்டாம் சார்ல்ஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]