உள்ளடக்கத்துக்குச் செல்

பிபிசி தமிழோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபிசி சின்னம்

பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின், தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி நாள்தோறும் 30 நிமிடங்கள், தமிழ் மொழியில், உலகச் செய்திகளையும், வேறு பல நிகழ்ச்சிகளையும், வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில், அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு, ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்திலும் பரப்பப்படுகிறது.

இடம் ஒலிபரப்பு நேரம் சிற்றலைவரிசைகள்
இந்தியா - 2115 - 2145 (இந்திய சீர் நேரம்) 6140 kHz (49 மீட்டர்)
இலங்கை - 2115 - 2145 (இலங்கை சீர் நேரம்) 7205 kHz (41 மீட்டர்)
லண்டன் - 1545 - 1615 (கிறின்விச் சீர் நேரம்) 9645 kHz (31 மீட்டர்)

இந்நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தேசிய சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.

பவள விழா

[தொகு]

2015 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று, 74 ஆண்டுகளை நிறைவு செய்து, 75 ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்த தமிழோசைக்கு பவளவிழா தொடங்கியது.[1]

சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தம்

[தொகு]

தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதாகவும் பிபிசி தெரிவித்தது.[2]

பணியாற்றிய ஒலிபரப்பாளர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபிசி_தமிழோசை&oldid=3774863" இலிருந்து மீள்விக்கப்பட்டது