விமல் சொக்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமல் சொக்கநாதன் ஒரு வானொலிக் கலைஞர். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் இவரது குரல் பன்னாட்டு வானொலிகளிலும் ஒலிக்கிறது. இவர் சட்டம் படித்து லண்டனில் வழக்கறிஞர் நிறுவனம் நடத்திவருகிறார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.

இலங்கை வானொலியில் இவர் படைத்த இசையும் கதையும், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய களம் பல காண்போம் என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி "வானொலிக் கலை" என்ற நூலை எழுதியுள்ளார்.

நடித்த மேடை நாடகம்[தொகு]

  • வரணியூரானின் பாசச்சுமை

நடித்த திரைப்படம்[தொகு]

எழுதிய நூல்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமல்_சொக்கநாதன்&oldid=3228767" இருந்து மீள்விக்கப்பட்டது