உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்குவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்குவில்
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
மஞ்சவனப்பதி முருகன் கோவில், கொக்குவில்

கொக்குவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°41′31″N 80°01′14″E / 9.691989°N 80.020428°E / 9.691989; 80.020428
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கொக்குவில் (Kokkuvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். யாழ்ப்பாணம்-காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் கோண்டாவிலும் உள்ளன. கிழக்குத் திசையில் திருநெல்வேலி அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.

திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, காங்கேசந்துறை வீதியைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில் இந்துக் கல்லூரி இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.[1]

பெயர்க்காரணம்

[தொகு]

கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள்படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள்படும்.[2][3][4]

கிராம சேவையாளர் பிரிவுகள்

[தொகு]
  • J/121 கொக்குவில் வடகிழக்கு
  • J/122 கொக்குவில் கிழக்கு
  • J/123 கொக்குவில் தென்கிழக்கு
  • J/124 கொக்குவில் வடமேற்கு
  • J/125 கொக்குவில் மேற்கு
  • J/126 கொக்குவில் மத்திகிழக்கு
  • J/127 கொக்குவில் தென்மேற்கு
  • J/128 கொக்குவில் மத்திமேற்கு

ஆலயங்கள்

[தொகு]

இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில் பின்வரும் இந்துக் கோயில்கள் உள்ளன:

  • மஞ்சவனப்பதி முருகன் கோயில்
  • மணியர்பதி சிவசுப்பிரமணியர் கோயில்
  • நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலயம்[5]
  • கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
  • பொற்பதி அம்பலவாண வீரகத்தி விநாயகர் ஆலயம்[6]
  • கோணாவளை ஞான வைரவசுவாமி ஆலயம்[7][8]
  • ஸ்ரீ சாயிதுர்க்கா ஆலயம்
  • தலையாழி ஞான வைரவர் ஆலயம்
  • வீரமா பிடாரி அம்பாள் ஆலயம்
  • ஸ்ரீ வராகி அம்பாள் ஆலயம்
  • சொர்ண சித்தி விநாயகர் ஆலயம்
  • காட்டுப்புலம் முருகமூர்த்தி கோயில்[9]
  • மாத்தனை கந்தசுவாமி கோயில்
  • முதலி கந்தசுவாமி கோயில்
  • வேம்படி முருகமூர்த்தி கோயில்

அத்துடன், கொக்குவில் பரிசுத்த திரித்துவ ஆலயம் (The Holy Trinity Church) என்னும் கிறிஸ்துவ ஆலயமும் உள்ளது.

பாடசாலைகள்

[தொகு]
  • கொக்குவில் இந்துக் கல்லூரி
  • தொழில்நுட்பக் கல்லூரி, கொக்குவில், யாழ்ப்பாணம்
  • கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை
  • கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை
  • கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலை
  • கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாசாலை
  • தலையாழி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை
  • C.C.T.M. தமிழ்க் கலவன் பாடசாலை

கொக்குவிலைச் சேர்ந்தவர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. த.செ.நடராசா, சு.நா.பாலகுமார் (2009). "கொக்குவில் நம் ஊர்". விவேகா பதிப்பகம். https://noolaham.org/wiki/index.php/கொக்குவில்_நம்_ஊர். 
  2. "Kokku-maṭu, Kok-maḍuva, Kevuḷiyā-maṭu, Keruṭā-maṭu, Koṇṭai-maṭu, Kaccilai-maṭu, Koṭuvā-maṭu, Virāl-maṭu, Keḷutti-maṭu, Kaḷi-maṭu, Pāvaṭṭā-maḍuva". TamilNet. March 23, 2008. https://www.tamilnet.com/art.html?artid=25074&catid=98. 
  3. "Ambalantota, Kapparathota, Ælathota, Kokkuththoduvaay". TamilNet. November 11, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32979. 
  4. "Vil-paṟṟu/ Vil-pattu". TamilNet. June 22, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22534&catid=98. 
  5. "Nantā-vil, Cilu-vil, Curu-vil, Cēttu-villlu". TamilNet. August 12, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32380. 
  6. "Aaraip-pattai". TamilNet. September 18, 2011. https://www.tamilnet.com/art.html?artid=34431. 
  7. "Maru-kona, Koa'naa-va'lai". TamilNet. September 23, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36686. 
  8. "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26647&catid=98. 
  9. "Nāvaṟ-kāṭu, Paṉaṅ-kāṭu, Kilukiluppaip-kāṭu, Neruñcik-kāṭu, Kurakkaṉ-kāṭu, Tōṭṭak-kāṭu, Iṭaik-kāṭu, Olāntāk-kāṭu, Maṇaṟ-kāṭu, Paṭu-kāṭu, Cuṭukāṭṭālaṭi, Kāṭṭumāvaṭi". TamilNet. July 19, 2010. https://www.tamilnet.com/art.html?artid=32253&catid=98. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்குவில்&oldid=4437192" இலிருந்து மீள்விக்கப்பட்டது