ஆனந்தி சூர்யப்பிரகாசம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆனந்தி சூர்யபிரகாசம் (சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) இலங்கை வானொலியில், சானா சண்முகநாதன் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகவும் இருந்தார். பின்னர் இங்கிலாந்து குடியேறியபின் 70 களில் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராகவும், நேர்முகம் காண்பவராகவும் பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார்.
சீர்காழி கோவிந்தராஜனின் இலண்டன் கச்சேரிக்கு இவர் செய்த அறிமுகம் இவரைப் பலருக்கு தெரியவைத்தது. சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுக்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.