வார்சா உடன்பாடு
Jump to navigation
Jump to search
வார்சா உடன்பாடு (Warsaw pact) கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேட்டோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகஸ்லோவாக்கிய குடியரசு, ஜெர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.