வெண்பாறைத் தீவு
பெத்ரா ப்ரான்கா தீவு சிங்கப்பூர் நாட்டின் கிழக்கே, தென் சீனக்கடலில் தெரியும் ஒரு சிறு பாரயாகும் . கடல் மட்டம் உயர்ந்த காலத்தில் சிறியதாகவும் , கடல் மட்டம் குறைந்த காலத்தில் சுமார் 137 மீட்டர் அளவில் இருக்கும். பல ஆண்டுகளாக சிங்கபூர் மற்றும் மலேசிய ஆகிய இரு நாடுகளும் கூறிவந்த இந்த தீவு, சிங்கப்பூருக்கே சொந்தம் என்று பன்னாட்டு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பெயர்க் காரணம்== பல ஆண்டுகளாக மீனவர்களுக்கு கடல் வணிகர்களுக்கும் தெரிந்துள்ள இந்த தீவு, அதன் மேல் படிந்துள்ள வெள்ளை நிற பறவை எச்சத்தின் காரணமாக, போர்த்திகீசிய மொழியில் வெண் பாறை என்று பொருள் தரும் பெத்ரா ப்லான்கா என்று அழைக்கப் பட்டது. மலாய் மொழியிலும் இதே பொருள் தரும் பாத்து புதெஹ் அல்லது புலாவ் பாத்து புதெஹ் என்று அழைக்கப் படுகிறது.
உரிமை பிரச்சனை[தொகு]
சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சனைக்குரிய இடமாக இந்த தீவு இருந்து வந்தது. பிரித்தானிய ஆட்சிகாலத்தில் ஒன்றாக இருந்த இந்த இருநாடுகளும் இதைப்பற்றி கண்டுகொள்ளாத நிலையில் சிங்கபூரின் சுதந்திரத்திர்க்கு பின்னர், இத்தீவு பிரச்சனைக்குரிய இடமாக ஆனது. டிசெம்பர் 21,1979 அன்று மலேசியா வெளியிட்ட வரைபடத்தில் இந்த தீவை அதன் இடமாக காட்டியது. அன்று தொடங்கி 29 ஆண்டுகள் இந்த பிரச்சனை நடந்து வந்தது. பல முறை பேச்சு வார்த்தை நடத்தி அதில் தோற்றுப்போன பின்னர் 1993ஆம் ஆண்டு இந்த விவகாரம் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பின்னர், பல விதமான ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், 2008, 23 மே அன்று, இந்த தீவு சிங்கப்போருக்கே சொந்தம் என்று தீர்ப்பானது.
ஹார்ச்பர்க் கலங்கரை விளக்கம்[தொகு]
கிழக்கிந்திய கம்பெனியின், மாலுமியான ஜேம்ஸ் ஹார்ச்பர்க், என்பவரின் நினைவாக 1836 ஆம் ஆண்டு இங்கு ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
தற்போதைய நிலை[தொகு]
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பிற்கு பின்னர், இந்த தீவை சுற்றி உள்ள கடல் எல்லைகளை குறிக்க இருநாடுகளும் இணைந்து ஒரு குழுவை 3 சூன் 2008 அன்று நியமித்து உள்ளது. இந்தக்குழு கடல் மட்டத்தில் இருந்து இந்த நிலப்பரப்பை ஆய்வு மேற்கொண்டு அதை பற்றிய அறிக்கை அளித்த பின்னர் இந்த தீவு பற்றி விவகாரங்கள் ஒரு முடிநிர்க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- [1] பரணிடப்பட்டது 2011-06-10 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2008-05-25 at the வந்தவழி இயந்திரம்
- [3]
- [4]
மேலும் படிக்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- [8] பரணிடப்பட்டது 2008-05-27 at the வந்தவழி இயந்திரம்
- [9] பரணிடப்பட்டது 2007-11-07 at the வந்தவழி இயந்திரம்