நூறாண்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நூறாண்டுப் போர்
Lenepveu, Jeanne d'Arc au siège d'Orléans.jpg
புனைவியல் ஓவியம்: ஆர்லியன்ஸ் முற்றுகையின்போது ஜோன் ஆஃப் ஆர்க்.
நாள் 1337–1453
இடம் முக்கியமாக பிரான்சும் கீழ்ப்பகுதி நாடுகளும்
வால்வா பிரிவினர் பிரான்சின் அரசர்களாகத் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிளாண்டாஜெனெட் பிரிவினர் தோல்வியுற்றனர்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
வால்வா பிரிவினர் கலே பேலே தவிர்ந்த பிரான்சின் ஏனைய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
பிரிவினர்
Blason France moderne.svg வால்வா பிரிவு
Escudo Corona de Castilla.png Castile
Royal coat of arms of Scotland.svg ஸ்காட்லாந்து
CoA civ ITA milano.png ஜெனோவா
Armoiries Majorque.svg மஜோர்க்கா
Blason Jean de Bohême.svg பொகீமியா
Armas de Aragon.png அரகன்
Armoiries Bretagne - Arms of Brittany.svg பிரிட்டனி
Royal Arms of England (1340-1367).svg பிளாண்டாஜெனெட் பிரிவு
Blason fr Bourgogne.svg பர்கண்டி
Armoiries Bretagne - Arms of Brittany.svg பிரிட்டனி
PortugueseFlag1385.svg போர்த்துக்கல்
Navarre Arms.svg நவார்
Blason Nord-Pas-De-Calais.svg பிளாண்டர்ஸ்
Hainaut Modern Arms.svg எனோ
Blason de l'Aquitaine et de la Guyenne.svg அக்கியூட்டேன்
Arms of the Grand Duchy of Luxembourg.svg லக்சம்பேர்க்
Holy Roman Empire Arms-single head.svg புனித ரோமன் பேரரசு

நூறாண்டுப் போர் என்பது 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டுவரை பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போரைக் குறிக்கும். பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இன்றி அற்றுப்போனபோது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு முதன்மையான போட்டியாளர்களாக வால்வா (Valois) பிரிவினரும், பிளாண்டாஜெனெட் (Plantagenet) அல்லது அஞ்சு என அழைக்கப்பட்ட பிரிவினரும் இருந்தனர். வால்வா பிரிவினர் பிரான்சின் அரச பதவியைக் கோரிய அதே வேளை, இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளினதும் அரச பதவிகள் தமக்கே உரியன என்றனர். இங்கிலாந்தின் பிளாண்டாஜெனெட் அரசர்கள், பிரான்சின் அஞ்சு, மற்றும் நோர்மண்டி பகுதிகளை அடியாகக் கொண்டவர்கள். பிரெஞ்சுப் படை வீரர்கள் இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து போரிட்டனர். பர்கண்டி, அக்கியூட்டேன் பகுதிகளைச் சேர்ந்தோர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினர்.

பிணக்கு 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக்காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 - 1369 வரையும், அடுத்தது 1389 - 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது எனலாம். இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரே போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என இணங்கிக் கொள்ளப்பட்டதால் இப் போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்திசார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450களில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.

இப் போர் உண்மையில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. எட்வார்டியப் போர் (1337-1360), கரோலின் போர் (1369-1389), லங்காஸ்ட்ரியப் போர் (1415-1429), ஜோன் ஆஃப் ஆர்கின் தோற்றத்துக்குப் பின்னான இங்கிலாந்து அரச மரபினரின் இறங்குமுகம் (1412-1431). சம காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மேலும் பல பிணக்குகள் இப் போருடன் தொடர்புடையவை. வாரிசுரிமைக்கான பிரெட்டன் போர், காஸ்ட்டிலிய உள்நாட்டுப் போர், இரண்டு பீட்டர்களுக்கு இடையிலான போர் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. நூறாண்டுப் போர் எனும் சொற்றொடர், நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளைக் குறிக்க வரலாற்றாளர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தியது ஆகும்.

இப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்[தொகு]

நூறாண்டுப் போர் விரைவான இராணுவ முறைகளின் வளர்ச்சி காலமாக இருந்தது. ஆயுத பயன்பாடு, உத்திகள், இராணுவ கட்டமைப்பு மற்றும் போர் குறித்த சமூக நோக்கம் ஆகியவை அனைத்தும் இக்காலத்தில் மக்களிடையே பெருமாற்றம் கண்டது. இதற்கு ஓரளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றமும், ஓரளவுக்கு போரினால் கற்ற பாடமும், ஓரளவுக்கு போருக்காகும் செலவுகளும் காரணமாயின. நூறாண்டு போருக்கு முன், அதிக குதிரைப்படை உடைய நாடு இராணுவ சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போரின் இறுதியில், இந்த நம்பிக்கை மாற்றப்பட்டது. குதிரைப்படையின் பயன்பாடு துப்பாக்கி மற்றும், நீண்ட தூரம் பாயும் ஆயுதங்கள் மூலம் தேவையற்றவை ஆயின. இப்போர்களின் போது மூன்றான் எட்வர்டு, தனது குதிரைப்படையினை வழிபோக்கிற்காகவும் துரத்திச்செல்லவும் மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்.[1] இப்போர்களின் இருதியின் அதிகமாக கவசம் அணிந்த போர்வீரர்களின் தேவை இல்லாமல் போனது.[2]

இப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.[3]

கறுப்புச் சாவின் பரவல் (தற்கால எல்லைகளில்).

இப்போரும் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கட்தொகை கொன்டிருந்தது. ஆனால் நூறாண்டு போரின் இறுதியில் அது பாதியாக குறைந்தது.[4] சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயின. நார்மாண்டி தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Powicke 1962, ப. 189
  2. Preston, Wise & Werner 1991, ப. 84
  3. Holmes, Urban & Schutz 1948, ப. 61
  4. Turchin 2003, பக். 179–180Historical dynamics: why states rise and fall
  5. Ladurie 1987, ப. 32The French peasantry, 1450–1660
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூறாண்டுப்_போர்&oldid=2371189" இருந்து மீள்விக்கப்பட்டது