விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 26
Appearance
- 1830 – அமெரிக்கப் பழங்குடி மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் இதனை சட்டமாக்கினார்.
- 1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.
- 1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1958 – இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
- 1970 – சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
- 1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
- 1998 – ஆத்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் (படம்) என்ற பெயரில் ஆத்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.
மனோரமா (பி. 1937) · மா. இராசமாணிக்கனார் (இ. 1967) · ஜெகசிற்பியன் (இ. 1978)
அண்மைய நாட்கள்: மே 25 – மே 27 – மே 28