விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 11:27 மணி வெள்ளி, அக்டோபர் 11, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
திசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)
- 1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.
- 1913 – தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.
- 1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.
- 1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- 1988 – உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது. (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)
- 1989 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
- 1991 – பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
வை. மு. கோதைநாயகி (பி. 1901) · விக்கிரமன் (இ. 2015) · இன்குலாப் (இ. 2016)
அண்மைய நாட்கள்: நவம்பர் 30 – திசம்பர் 2 – திசம்பர் 3
- 1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி (படம்) தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
- 1946 – நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்டசபையைப் பிரதிநிதித்துவப்படுத்த பிரித்தானியா அழைத்தது.
- 1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது.
- 1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.
- 1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
- 1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
பாண்டித்துரைத் தேவர் (இ. 1911) · எஸ். ஜி. கிட்டப்பா (இ. 1933) · மு. கு. ஜகந்நாதராஜா (இ. 2008)
அண்மைய நாட்கள்: திசம்பர் 1 – திசம்பர் 3 – திசம்பர் 4
திசம்பர் 3: பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
- 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
- 1854 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- 1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
- 1984 – போபால் பேரழிவு (படம்): இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
- 1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
புதுவை இரத்தினதுரை (பி. 1948) · கோவைக்கிழார் (இ. 1969) · அநுத்தமா (இ. 2010)
அண்மைய நாட்கள்: திசம்பர் 2 – திசம்பர் 4 – திசம்பர் 5
- 1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
- 1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.
- 1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு (படம்) கொண்டு வந்தார்.
- 1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
- 1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
- 1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
கண்டசாலா (பி. 1922) · அ. வேங்கடாசலம் பிள்ளை (இ. 1953) · ந. பிச்சமூர்த்தி (இ. 1976)
அண்மைய நாட்கள்: திசம்பர் 3 – திசம்பர் 5 – திசம்பர் 6
திசம்பர் 5: உலக மண் நாள், பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்
- 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
- 1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
- 1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் (படம்) பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
- 1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
- 1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
- 1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1995 – ஈழப்போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
ஆறுமுக நாவலர் (இ. 1879) · கல்கி (இ. 1954) · ஜெயலலிதா (இ. 2016)
அண்மைய நாட்கள்: திசம்பர் 4 – திசம்பர் 6 – திசம்பர் 7
திசம்பர் 6: பின்லாந்து - விடுதலை நாள் (1917)
- 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
- 1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
- 1957 – வங்கார்ட் (படம்) விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
- 1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
- 1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
ஆர்வி (பி. 1918) · சாவித்திரி (பி. 1935) · க. கைலாசபதி (இ. 1982)
அண்மைய நாட்கள்: திசம்பர் 5 – திசம்பர் 7 – திசம்பர் 8
- 1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.
- 1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல் (படம்): சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
- 1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்பல்லோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.
- 1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.
ந. பாலேஸ்வரி (பி. 1929) · வை. அநவரத விநாயகமூர்த்தி (இ. 2009) · சோ ராமசாமி (இ. 2016)
அண்மைய நாட்கள்: திசம்பர் 6 – திசம்பர் 8 – திசம்பர் 9
திசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம் விழா
- 1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரத்தை ஒன்பதாம் பயசு அறிவித்தார்.
- 1953 – 'அணு அமைதிக்கே' என அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
- 1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.
- 1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1985 – சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
- 2013 – லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
தேவன் யாழ்ப்பாணம் (இ. 1982) · எஸ். அகஸ்தியர் (இ. 1995) · கு. இராமலிங்கம் (இ. 2002)
அண்மைய நாட்கள்: திசம்பர் 7 – திசம்பர் 9 – திசம்பர் 10
திசம்பர் 9: தான்சானியா - விடுதலை நாள் (1961)
- 1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1917 – எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
- 1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.
- 1948 – இனப்படுகொலை உடன்பாடு ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1979 – பெரியம்மை தீ நுண்மம் (படம்) முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
- 2016 – வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.
வெ. தட்சிணாமூர்த்தி (பி. 1919) · மதுரை சோமு (இ. 1989) · சு. வில்வரத்தினம் (இ. 2006)
அண்மைய நாட்கள்: திசம்பர் 8 – திசம்பர் 10 – திசம்பர் 11
திசம்பர் 10: மனித உரிமைகள் நாள்
- 1520 – மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
- 1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.
- 1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (படம்) வெளியிடப்பட்டது.
- 1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.
- 1901 – வேதியியலாளர் அல்பிரட் நோபல் நினைவாக முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.
ராஜாஜி (பி. 1878) · சிற்றம்பலம் கார்டினர் (இ. 1960) · வா. செ. குழந்தைசாமி (இ. 2016)
அண்மைய நாட்கள்: திசம்பர் 9 – திசம்பர் 11 – திசம்பர் 12
திசம்பர் 11: பன்னாட்டு மலை நாள்
- 1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
- 1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.
- 1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (சின்னம் படத்தில்) அமைக்கப்பட்டது.
- 1964 – சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
- 1972 – அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.
- 1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
மிரோன் வின்சுலோ (பி. 1789) · சுப்பிரமணிய பாரதியார் (பி. 1882) · ம. ச. சுப்புலட்சுமி (இ. 2004)
அண்மைய நாட்கள்: திசம்பர் 10 – திசம்பர் 12 – திசம்பர் 13
- 1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
- 1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய மறைப்பு (படம்) அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
- 1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் "S" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.
- 1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
- 1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.
- 1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
- 1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
ராஜா செல்லையா (பி. 1922) · ஆலங்குடி சோமு (பி. 1932)
அண்மைய நாட்கள்: திசம்பர் 11 – திசம்பர் 13 – திசம்பர் 14
திசம்பர் 13: மால்டா - குடியரசு நாள் (1974)
- 1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
- 1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1937 – நாங்கிங் படுகொலைகள்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர் (படம்).
- 1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
- 1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
- 2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 – ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
ஈழத்துப் பூராடனார் (பி. 1928) · நா. பார்த்தசாரதி (இ. 1987) · திமிலை மகாலிங்கம் (இ. 2010)
அண்மைய நாட்கள்: திசம்பர் 12 – திசம்பர் 14 – திசம்பர் 15
- 1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
- 1900 – குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
- 1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் (படம்) வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.
- 1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- 1940 – கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
பாலூர் து. கண்ணப்பர் (பி. 1908) · சோமசுந்தர பாரதியார் (இ. 1959) · வி. என். சுந்தரம் (இ. 2009)
அண்மைய நாட்கள்: திசம்பர் 13 – திசம்பர் 15 – திசம்பர் 16
- 1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
- 1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1960 – மன்னர் மகேந்திரா (படம்) நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
- 1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
- 2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
- 2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (பி. 1869) · கா. ஸ்ரீ. ஸ்ரீ (பி. 1913) · வினு சக்ரவர்த்தி (பி. 1945)
அண்மைய நாட்கள்: திசம்பர் 14 – திசம்பர் 16 – திசம்பர் 17
- 1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
- 1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.
- 1947 – உலகின் முதலாவது செயல் முறை திரான்சிஸ்டர் உருவாக்கப்பட்டது.
- 1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. (படம்) இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
மயிலை சீனி. வேங்கடசாமி (பி. 1900) · பரமஹம்சதாசன் (பி. 1916) · அடையார் கே. லட்சுமணன் (பி. 1933)
அண்மைய நாட்கள்: திசம்பர் 15 – திசம்பர் 17 – திசம்பர் 18
- 1903 – ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
- 1928 – காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் முகமாக, இந்தியப் புரட்சியாளர்கள் பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகியோர் பிரித்தானியக் காவல்துறை அதிகாரி ஜேம்சு சோண்டர்சு என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்தனர்.
- 1938 – ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.
- 1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1960 – செருமனியின் மியூனிக் நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் 20 பயணிகளும், தரையில் 32 பேரும் உயிரிழந்தனர்.
- 1967 – ஆத்திரேலியப் பிரதமர் அரல்டு ஓல்ட் (படம்) விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவரது உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
- 2014 – ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.
சோ. இளமுருகனார் (இ. 1975)
அண்மைய நாட்கள்: திசம்பர் 16 – திசம்பர் 18 – திசம்பர் 19
திசம்பர் 18: நைஜர் – குடியரசு தினம் (1958)
- 1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.
- 1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- 1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
- 1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.
- 1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
ஆறுமுக நாவலர் (பி. 1822) · க. நா. சுப்ரமண்யம் (இ. 1988) · சி. சு. செல்லப்பா (இ. 1988)
அண்மைய நாட்கள்: திசம்பர் 17 – திசம்பர் 19 – திசம்பர் 20
திசம்பர் 19: கோவா - விடுதலை நாள்
- 1606 – அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
- 1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.
- 1927 – கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.
- 1961 – போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
- 1984 – ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
- 1998 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் (படம்) மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
க. அன்பழகன் (பி. 1922) · கி. ஆ. பெ. விசுவநாதம் (இ. 1994) · எஸ். பாலசுப்பிரமணியன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: திசம்பர் 18 – திசம்பர் 20 – திசம்பர் 21
- 1803 – பிரான்சிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
- 1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
- 1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடகோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது (படம்).
- 1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.
- 1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
- 2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அ. வேங்கடாசலம் பிள்ளை (பி. 1886) · கா. பொ. இரத்தினம் (இ. 2010) · தானியல் செல்வராஜ் (இ. 2019)
அண்மைய நாட்கள்: திசம்பர் 19 – திசம்பர் 21 – திசம்பர் 22
- 69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
- 1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- 1919 – அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
- 1965 – அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.
- 1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 (படம்) புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
- 1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி திசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
நா. கதிரைவேற்பிள்ளை (பி. 1871) · வரதர் (இ. 2006) · பிரபஞ்சன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: திசம்பர் 20 – திசம்பர் 22 – திசம்பர் 23
- 1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
- 1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
- 1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
- 1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.
- 1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் (படம்) 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
இராமானுசன் (பி. 1887) · சிலம்பொலி செல்லப்பன் (பி. 1929) · சாலினி இளந்திரையன் (பி. 1933)
அண்மைய நாட்கள்: திசம்பர் 21 – திசம்பர் 23 – திசம்பர் 24
- 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
- 1947 – முதலாவது டிரான்சிஸ்டர் (படம்) நியூ செர்சி பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- 1972 – நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
- 1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
- 2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.
சா. தர்மராசு சற்குணர் (இ. 1953) · பி. கக்கன் (இ. 1981) · கே. பாலச்சந்தர் (இ. 2014)
அண்மைய நாட்கள்: திசம்பர் 22 – திசம்பர் 24 – திசம்பர் 25
திசம்பர் 24: லிபியா – விடுதலை நாள் (1951)
- 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
- 1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.
- 1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
- 1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.
- 2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈ. வெ. இராமசாமி (இ. 1973) · ம. கோ. இராமச்சந்திரன் (படம், இ. 1987) · பி. பானுமதி (இ. 2005)
அண்மைய நாட்கள்: திசம்பர் 23 – திசம்பர் 25 – திசம்பர் 26
- 1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
- 1758 – ஏலியின் வால்வெள்ளி அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.
- 1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
- 1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).
- 1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
டி. கே. இராமானுஜர் (பி. 1905) · பா. வே. மாணிக்க நாயக்கர் (இ. 1931) · இராஜாஜி (இ. 1972)
அண்மைய நாட்கள்: திசம்பர் 24 – திசம்பர் 26 – திசம்பர் 27
- 1825 – முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
- 1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது
- 1896 – இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.
- 1898 – மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
- 2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.
- 2004 – வடக்கு சுமாத்திராவை 9.1 அளவு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர் (படத்தில் தாய்லாந்தில் ஆழிப்பேரலை).
முருகு சுந்தரம் (பி. 1929) · எஸ். யேசுரத்தினம் (பி. 1931) · சாவித்திரி (இ. 1981)
அண்மைய நாட்கள்: திசம்பர் 25 – திசம்பர் 27 – திசம்பர் 28
- 1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
- 1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
- 1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.
- 1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
- 1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- 1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அரசுத்தலைவர் அபிசுல்லா அமீன் (படம்) சுட்டுக்கொல்லப்பட்டார், பப்ராக் கர்மால் தலைவரானார்.
விருகம்பாக்கம் அரங்கநாதன் (பி. 1931) · வ. நல்லையா (இ. 1976) · சீனு மோகன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: திசம்பர் 26 – திசம்பர் 28 – திசம்பர் 29
- 1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.
- 1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் (படம்) பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
- 1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.
- 1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.
- 1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
- 2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.
எஸ். என். நாகராசன் (பி. 1927) · எஸ். பாலசுப்பிரமணியன் (பி. 1936) · எஸ். செல்வசேகரன் (இ. 2012)
அண்மைய நாட்கள்: திசம்பர் 27 – திசம்பர் 29 – திசம்பர் 30
- 1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
- 1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் (படம்) முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
- 2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.
ரொபின் தம்பு (பி. 1930) · பழ. கோமதிநாயகம் (இ. 2009) · தமிழண்ணல் (இ. 2015)
அண்மைய நாட்கள்: திசம்பர் 28 – திசம்பர் 30 – திசம்பர் 31
- 1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.
- 1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1916 – மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார்.
- 1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
- 1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
- 2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் (படம்) தூக்கிலிடப்பட்டார்.
இரமண மகரிசி (பி. 1879) · வி. நாகையா (இ. 1973) · கோ. நம்மாழ்வார் (இ. 2013)
அண்மைய நாட்கள்: திசம்பர் 29 – திசம்பர் 31 – சனவரி 1
- 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- 1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக, அன்று சிறிய நகரமாயிருந்த ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
- 1879 – வெள்ளொளிர்வு விளக்கு (படம்) முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1968 – உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
- 1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
- 1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
- 1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
டி. எஸ். துரைராஜ் (பி. 1910) · ச. வே. சுப்பிரமணியன் (பி. 1929) · தொ. மு. சி. ரகுநாதன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: திசம்பர் 30 – சனவரி 1 – சனவரி 2