உள்ளடக்கத்துக்குச் செல்

முறைபிறழ்புணர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முறைபிறழ்புணர்ச்சி (adultery) என்பது ஒரு திருமணமானவர் அவரின் இணையில்லாத மற்றொருவருடன் கொள்ளும் பாலுறவு ஆகும். மேற்கு நாடுகளில் திருமணமானவர் மட்டுமே முறை தவறி உறவு கொண்டதாகக் கருதப்படுவர். சில நாடுகள் ஒரு மணமான பெண் முறை தவறி உறவு கொண்டால் மட்டுமே முறைபிறழ்புணர்ச்சி என்கிற நிலையைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு ஆணுக்கு அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

கிறித்தவ சமயம்[தொகு]

கிறித்தவ சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் ஏழாவது கட்டளை பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக என்பதாகும். இதை மீறியவர்களுக்கு மரணதண்டனை என்று விவிலியம் கூறிகிறது.[1] இங்கு திருமணமான பெண்ணோடு உடலுறவு கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஆண் பரந்தமையுடன் அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அது குற்றம் அல்ல. தற்காலத்தில் கிறித்தவ பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இது ஒரு குற்றம் அல்ல, ஏழு கொடிய பாவங்கள் எனப்படுகிறது.

இந்தியா[தொகு]

இந்தியாவில் இப்படி முறை தவறிய புணர்ச்சி நடத்தல் ஒரு குற்றம் ஆகும். ஆனால் முறை தவறி நடந்த ஆணுக்கு மட்டுமே தண்டனை உண்டு. பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் முறை தவறி நடப்பது மன்னிக்க முடியாத தொழில்முறைக் குற்றம் ஆகும். இக்குற்றத்திற்கு அவர்களின் பெயர்கள் மருத்துவர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மருத்துவத் தொழிலை வாழ்நாளில் கடைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவு வழங்கப்பட்டு விடும்.[மேற்கோள் தேவை]

இஸ்லாம்[தொகு]

இஸ்லாமிய சமயத்தில் இவ்வாறான புணர்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது. திருமணமானவர் அல்லது திருமணமாகாக ஒருவர் இவ்வாறான புணர்ச்சியில் ஈடுபடுவது தவறாகும். திருமணமானவர் இப்புணரச்சியில் ஈடுபட்டால். இஸ்லாமிய தண்டனையின் பிரகாரம் கல்லால் அடித்து கொலை செய்யப்படுவார், திருமணமாகாதவர் இதில் ஈடுபட்டால் அவர், நூறு கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Deuteronomy 22:22: If a man commits adultery with another man's wife – with the wife of his neighbor – both the adulterer and the adulteress must be put to death
"https://ta.wikipedia.org/w/index.php?title=முறைபிறழ்புணர்ச்சி&oldid=3735755" இலிருந்து மீள்விக்கப்பட்டது