உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரூபானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி சித்ரூபானந்தா (இறப்பு: மே 14, 2014)[1] இலங்கை பருத்தித்துறை, இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனரும், அதன் முதல்வராகவும் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுவாமி சித்ரூபானந்தாவின் இயற்பெயர் பி. இரத்தினசபாபதி. துறவறம் பூண்ட இவருக்கு இராமகிருஷ்ண மடத்தின் 10வது தலைவர் சுவாமி விரேஷ்வரானந்த மகராஜ் 1968 ஆம் ஆண்டில் தீட்சை அளித்தார்.[2] சித்ரூபானந்தர் என்ற பெயருடன் திரும்பிய சுவாமிகள் 1969 ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் தமது ஆச்சிரமத்தை ஒரு சிறு குடிசையில் தொடங்கினார். இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். சித்ரூபானந்தர் சுவாமி ஜீவனானந்தரின் கீழ் சில ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

பருத்தித்துறையில் கலட்டி என்ற இடத்தில் 1971 செப்டம்பரில் இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் அமைக்கப்பட்டது.[2] சித்ரூபானந்தர் பல்வேறு சமய, சமூகப் பணிகளை இவர் இவ்வாச்சிரமம் மூலம் ஆற்றி வந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சுவாமி சித்ரூபானந்தா தேகவியோகம் அடைவு". தினகரன். 18 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991". 27 டிச. 1991. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரூபானந்தர்&oldid=3715898" இலிருந்து மீள்விக்கப்பட்டது