ராணி ராசமணி
Jump to navigation
Jump to search
ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சிஷ்யையான ராணி ராசமணி தட்சிணேசுவர காளி கோயிலைக் கட்டியவர். 1793 செப்டம்பர் மாதம் கல்கத்தாவிற்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கோனா என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராசமணி. தாயார் ராணி என்ற செல்லப்பெயரில் அழைத்ததால் அது அடைமொழியானது. இவரது பெற்றோர் ஹரேகிருஷ்ண தாஸ், ராம ப்ரியா. இவரது ஏழாவது வயதில் தாயார் இறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி 1804 ஏப்ரல் மாதத்தில் கல்கத்தா ஜான் பஜாரைச் சேர்ந்த பணக்காரர் ப்ரீதராம் தாஸின் மகனான ராஜ்சந்திர தாஸிற்கு திருமணம் செய்விக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 1-31