பூர்ண சந்திர கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சீடரான பூர்ண சந்திர கோஷ் 1871ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1872 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிறந்திருக்கக் கூடும். இவர் வடக்கு கல்கத்தாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் ராய்பகதூர் தீனநாத் கோஷ், கிருஷ்ணமானினி. இவர் ’ம-’ தலைமையாசிரியராக இருந்த வித்யாசாகரின் பள்ளியில் படித்துவந்தார். ம- இவரை 1885 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அழைத்துச் சென்றார். இவர் ஸ்ரீராமகிருஷ்ணரால், விஷ்ணுவின் அம்சமாகவும் ஈசுவர கோடிகளில் ஒருவராகவும் அடையாளம் காட்டப்பட்டவர் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 701-725
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ண_சந்திர_கோஷ்&oldid=2072685" இலிருந்து மீள்விக்கப்பட்டது