சுவாமி யோகானந்தர்
Jump to navigation
Jump to search
சுவாமி யோகானந்தர் | |
---|---|
![]() சுவாமி யோகானந்தர் | |
பிறப்பு | 30 மார்ச் 1861 கல்கத்தா |
இறப்பு | 28 மார்ச் 1899 கல்கத்தா |
இயற்பெயர் | யோகீந்திரநாத் ராய் சௌத்ரி |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
சுவாமி யோகானந்தர் (30 மார்ச் 1861 - 28 மார்ச் 1899) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஈசுவர கோடிகள் என்று அடையாளம் காட்டிய ஆறு இளைஞர்களுள் யோகினும் ஒருவர். சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில் பலராம் போஸ் வீட்டில் வைத்து ராமகிருஷ்ண மிஷனைத் துவக்கியபோது உபதலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 191 229