சுவாமி அபேதானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி அபேதானந்தர்
சுவாமி அபேதானந்தர்
பிறப்பு2 அக்டோபர் 1866
கல்கத்தா, அஹ்ரிடோலா
இறப்பு8 செப்டம்பர் 1939
டார்ஜிலிங்
இயற்பெயர்காளி பிரசாத் சந்திரன்
குருஸ்ரீராமகிருஷ்ணர்

சுவாமி அபேதானந்தர் (2 அக்டோபர் 1866 - 8 செப்டம்பர் 1939) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது பெற்றோர் ரசிக்லால் சந்திரர் - நயனதாரா தேவி.தேர்ந்த ஆன்மீகக் குருவைத் தேடிய காளி பிரசாத் சந்திரன் 1884 சூன் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சேவை செய்தார். சுவாமி அபேதானந்தரின் மறைவு குறித்த செய்த அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.[1]

வ.உ.சிதம்பரனாரின் வரவேற்பு[தொகு]

1906 ஆம் ஆண்டு சூன் 29 ஆம் தேதியன்று இலங்கையிலிருந்து தூத்துக்குடி வந்து இறங்கிய சுவாமி அபேதானந்தருக்கு வ.உ.சிதம்பரனாரும் மற்ற பல தூத்துக்குடி பிரமுகர்களும் வித்தியாசமான வரவேற்பு அளித்தனர்.[2]

பாரதியாரின் கவிதை[தொகு]

1906 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி:

தூயாஅபே தாநந் தனெனும் பெயர்கொண்
டொளிர் தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பா தஞ்
சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர் நன்
னெறி சாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடுமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே!

[1]

சென்னை வந்த சுவாமி அபேதானந்தர், ’வேதாந்த மதத்தின் உலகளாவிய தன்மை’ என்ற தலைப்பில் சென்னை டவுன் ஹால் வெளி மைதானத்தில் ஐயாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் ராவ்பகதூர் எம்.ஆதிநாராயணய்யா தலைமையில் சொற்பொழிவாற்றினார். பாரதியாரும் இக்கூட்டத்திற்கு சென்றுள்ளது அவர் தமது இந்தியா பத்திரிக்கையில் இச்சொற்பொழிவைப் பற்றி உணர்ச்சியுடன் எழுதியதின் மூலம் தெரியவருகிறது.[1]

’பிரக்ருதீம் பரமாம்’[தொகு]

அன்னை சாரதா தேவியின் மீது இவர் இயற்றிய ’பிரக்ருதீம் பரமாம் அபயாம் வரதாம்’ எனும் பாடலைக் கேட்டு அன்னை சாரதா தேவி, ’சரசுவதி தேவி உனது நாக்கில் எழுந்தருள்வாள்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.[1]

நூல்கள்[தொகு]

  • நடந்தே பல புனிதத் தலங்களுக்கும் சென்ற இவர் ’மை லைஃப் ஸ்டோரி’(My Life Story) என்ற புத்தகத்தில் தமது இமயமலைப் பயணத்தைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
  • பல்வேறுபட்ட தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.[3][4] மேலை நாட்டுப் பணியின் போது இவரது எழுத்துகள் மேலை நாட்டினரை வெகுவாக ஈர்த்தன.

ராமகிருஷ்ண வேதாந்த சொசைட்டி[தொகு]

  • கல்கத்தாவில் ராமகிருஷ்ண வேதாந்த சொசைட்டியை ஆரம்பித்தார்.

டார்ஜிலிங்கில்[தொகு]

  • 1924 ஆம் வருடம் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த போது இவரை மகாத்மா காந்தி, சித்தரஞ்சன் தாஸ், லார்ட் லைட்டன் (வங்காள கவர்னர்), டாக்கா நவாப் மற்றும் பலர் சந்தித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 489-533
  2. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்;1977;மார்ச்; ஸ்ரீராமகிருஷ்ண இயக்கமும் வ.உ.சியும்; கட்டுரை;
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-05-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-26 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_அபேதானந்தர்&oldid=3555182" இருந்து மீள்விக்கப்பட்டது