ஹிருதயராம் முகோபாத்யாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிருதயர் என்று அழைக்கப்பட்ட ஹிருதயராம் முகோபாத்யாயர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச் சீடர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒன்றுவிட்ட சகோதரியின் (தந்தை வழி) பேரன். ராமகிருஷ்ணரை விட நான்கு வயது இளையவர் என்பதால்

இவர் பிறந்த வருடம் 1840 ஆக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. காமார்புகூருக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள சிஹார் எனும் ஊரில் பிறந்தார். 1855 லிருந்து 1881 வரையிலான கிட்டத்தட்ட 25 வருட காலத்திற்கு ராமகிருஷ்ண பரமஹம்சருடனே இருந்தவர். சுவாமி சாரதானந்தர் தமது குருவைப் பற்றி எழுதிய நூலின் இரண்டாம் பாகத்தின் சாதக நிலை எனும் தலைப்பிற்கு வேண்டிய பல விஷயங்களை அவருக்கு விளக்கி உதவியவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 73-115