சுவாமி நிரஞ்சனானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி நிரஞ்சனானந்தர்
சுவாமி நிரஞ்சனானந்தர்
பிறப்பு1862
கல்கத்தா அருகிலுள்ள ராஜர்கட்-விஷ்ணுபூர்
இறப்பு1904 மே 9
ஹரித்துவார்
இயற்பெயர்நித்திய நிரஞ்சன் கோஷ்
குருராமகிருஷ்ணர்

சுவாமி நிரஞ்சனானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் நித்திய நிரஞ்சன் கோஷ். இவரது தந்தை பெயர் அம்பிகாசரண் கோஷ். 1882 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். தம்மை அடிக்கடி வந்து பார்க்கச் சொன்ன ராமகிருஷ்ண பரமஹம்சர், இவரிடம் "மனதைப் பேய்களைப் பற்றி சிந்திக்கப் பழக்கினால் நாளடைவில் நீயும் பேயாவாய், கடவுளைச் சிந்திக்க ஆரம்பித்தால் வாழ்வில் ஆனந்தம் நிறையும்" என்று அறிவுறுத்தினார். தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் குருவிற்கு சேவைசெய்ய 1885 ஆம் ஆண்டு நிரஞ்சன் வீட்டை விட்டு வெளியேறினார். நிரஞ்சனை தமது அந்தரங்கச் சீடர்களில் ஒருவராகவும் ஈசுவர கோடிகளில் ஒருவராகவும் ராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்டுள்ளார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 231 - 261
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நிரஞ்சனானந்தர்&oldid=2072679" இலிருந்து மீள்விக்கப்பட்டது