ராம் சந்திர தத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சீடரான ராம் சந்திர தத்தர் 1851 அக்டோபர் 30 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் நரசிம்ம பிரசாத் தத்தர், துளசிமணி. ராமசந்திரர் அறிவியல் படித்தவராதலால் தாம் உண்மையென்று கருதியவற்றைக் கடைபிடிப்பதில் மிகுந்த உறுதி கொண்டிருந்தார். சுய முயற்சியால் இவர் கண்டுபிடித்த ரத்தப் போக்கு நோயைக் குணப்படுத்தும் மூலிகை மருந்தை அரசாங்கம் அங்கீகரித்ததால் புகழ் பெற்று இங்கிலாந்து வேதியியல் அறிஞர் சபையில் உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் ராணுவ மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தார். நாத்திகத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டினை ஐந்து வருடங்கள் கொண்டிருந்தார். தமது இளம் வயது மகளின் மறைவிற்குப் பின்னர் பிரம்ம சமாஜம், கிறிஸ்தவம், இந்து மதப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து தம் சந்தேகங்களை தீர்க்க முயன்றார். 1879 நவம்பர் 13 ஆம் தேதி ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 153-183
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சந்திர_தத்தர்&oldid=2072692" இருந்து மீள்விக்கப்பட்டது