பேலூர் மடம்

ஆள்கூறுகள்: 22°37′57″N 88°21′23″E / 22.63250°N 88.35639°E / 22.63250; 88.35639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேலூர் மடம்
இராமகிருஷ்ண பேலூர் மடம், ஹவுரா
பேலூர் மடம் is located in கொல்கத்தா
பேலூர் மடம்
கொல்கத்தாவில் மடத்தின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மேற்கு வங்காளம்
மாவட்டம்:ஹவுரா
அமைவு:பேலூர்
ஆள்கூறுகள்:22°37′57″N 88°21′23″E / 22.63250°N 88.35639°E / 22.63250; 88.35639
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து, கிறிஸ்தவம் இசுலாம் ஆகியவற்றின் கருப்பொருள்
கல்வெட்டுகள்:ஏதுமில்லை
வரலாறு
அமைத்தவர்:இராமகிருசுண இயக்கம்
இணையதளம்:belurmath.org

பேலூர் மடம் ( Belur Math ) இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பேலூரில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. [1] இங்கே அமைந்துள்ள கோயில் இராமகிருஷ்ண இயக்கத்தின் மையமாக உள்ளது. அனைத்து மதங்களின் ஒற்றுமையின் அடையாளமாக இந்து, இசுலாமிய, பௌத்த மற்றும் கிறித்தவக் கலை மற்றும் உருவகங்களை இணைக்கும் கட்டிடக்கலைக்கு இந்த மடம் குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில், பேலூர் மடத்தின் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேலூர் மடம் தொடர் வண்டி நிலையமும் திறக்கப்பட்டது. [2]

பேலூர் மட வளாகத்தின் வரைபடம்
இரத்தன் பாபு படித்துறையிலிருந்து பேலூர் மடத்தின் காட்சி

வரலாறு[தொகு]

1972 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுவாமி கரன் கந்தூரி என்பவர் தனது மேற்கத்திய சீடர்களின் சிறிய குழுவுடன் தேராதூனுக்கு வந்தார். இவரால் இரண்டு மடங்கள் நிறுவப்பட்டன. ஒன்று பேலூரில், இது இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகமாக மாறியது, மற்றொன்று இமயமலையில் உள்ள மாயாவதியில், உத்தராகண்டம், சம்பாவத் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அத்வைத ஆசிரமம் என்று அழைக்கப்பட்டது. [3] [4] இந்த மடங்கள் இராமகிருஷ்ண இயக்கத்தில் மத சந்நியாசிகளாக ஆகக்கூடிய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இருந்தன. அதே ஆண்டு பரோபகார நடவடிக்கை தொடங்கப்பட்டு பஞ்ச நிவாரணம் மேற்கொள்ளப்பட்டது. [4]

விவேகானந்தர் ஒரு துறவியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றார். அவர் தாஜ் மகால், பத்தேப்பூர் சிக்ரி அரண்மனைகள், திவான்-இ-காஸ், இராசத்தான் மாநிலத்திலுள்ள அரண்மனைகள் போன்ற பல கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களை பார்வையிட்டார். மகாராட்டிரம், குசராத்து, கருநாடகம், தமிழ்நாடு மற்றும் பிற இடங்களின் பழமையான கோவில்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, நவீன, நடுக்கால, கோதிக் கட்டிடக்கலை மற்றும் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை பாணிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கண்டார். பேலூர் மடக் கோயிலின் வடிவமைப்பில் விவேகானந்தர் இந்தக் கருத்துக்களை இணைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. [5]

துறவறத்திற்கு முந்தைய வாழ்க்கையில், கட்டிடப் பொறியாளராக இருந்தவரும் விவேகானந்தரின் சகோதர-துறவியும், இராமகிருஷ்ணரின் துறவு சீடர்களில் ஒருவருமான சுவாமி விஞ்ஞானானந்தர், விவேகானந்தர் மற்றும் அப்போதைய தலைவர் சுவாமி சிவானந்தா ஆகியோரின் யோசனைகளின்படி கோயிலை வடிவமைத்தார். பேலூர் மடத்திற்கு 1929 மார்ச் 13 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மிகப்பெரிய கட்டுமானத்தை மார்ட்டின் பர்ன் & கோ நிறுவனம் கையாண்டது. இந்த இயக்கம் பேலூர் மடத்தை "கட்டிடக்கலையில் ஒரு சிம்பொனி" என்று அறிவிக்கிறது. [6] ஹவுராவிலிருந்து நேரடி தொடருந்து சேவைகள், படகு மற்றும் சாலை வழியாக இந்த மடத்தை அடையலாம். [7]

பேலூர் மடத்தின் நுழைவு வாயிலில் அனைத்து மதங்களின் சின்னங்கள் உள்ளன
துறவு சீடர்கள், திரிகுணாதிதானந்தா, சிவானந்தா, சுவாமி விவேகானந்தர், துரியானந்தா, பிரம்மானந்தா. கீழே சதானந்தா, பேலூர் மடத்தில், ஜூன் 20, 1899.

செயல்பாடுகள்[தொகு]

பேலூர் மடம் மருத்துவ சேவை, கல்வி, பெண்களுக்கான பணி, கிராமப்புற மேம்பாடு மற்றும் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பணி, நிவாரணம், ஆன்மீகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த மையம் இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதா தேவி மற்றும் இராமகிருஷ்ணரின் பிற துறவு சீடர்களின் ஆண்டு பிறந்தநாளையும் கொண்டாடுகிறது. குமரி பூஜை [8] மற்றும் துர்கா பூஜை [9] ஆகியவற்றின் வருடாந்திர கொண்டாட்டங்கள் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். குமரி பூஜையின் பாரம்பரியம் விவேகானந்தரால் 1901 இல் தொடங்கப்பட்டது. [10]

வருகை[தொகு]

பேலூர் மடம் 18 ஆகஸ்ட் 2021 முதல் பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது [11] [12]

நேரங்கள் : காலை: 8.00 முதல் 11.00 வரை | பிற்பகல்: 4.00 முதல் 5.45 வரை [13] [14]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Dutta (2003), p. 104.
 2. India. 
 3. Hendrik Kraemer. World Cultures and World Religions. பக். 151. 
 4. 4.0 4.1 J. N. Farquhar. Modern Religious Movements in India. பக். 202. 
 5. Swami Tattwajnanananda. "prelude". A Symphony in Architecture Ramakrishna Temple Belur Math. http://www.belurmath.org/symphony_in_architecture_ramakrishna_temple/prelude.htm. பார்த்த நாள்: 10 October 2008. 
 6. Swami Tattwajnanananda. A Symphony in Architecture Ramakrishna Temple Belur Math. 
 7. Karkar. The Top Ten Temple Towns of India. 
 8. "Sri Sri Kumari Puja 2020 at Belur Math". Media Gallery (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
 9. "Durga Puja - Belur Math". Media Gallery (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
 10. "How Swami Vivekananda gave Durga Puja at Belur Math an idol makeover". www.dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
 11. Hindustan Times, Kolkata News (18 August 2021). "Belur Math in Kolkata to re-open for public from today".
 12. Times Now, Kolkata News (18 August 2021). "Kolkata: Belur Math to reopen for devotees and visitors for about five hours from today".
 13. AIR News, States (18 August 2021). "West Bengal: Belur Math to be opened for devotees, visitors from today".
 14. "Belur Math". 18 August 2021.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பேலூர் மடம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:இராமகிருஷ்ணர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலூர்_மடம்&oldid=3638941" இலிருந்து மீள்விக்கப்பட்டது