இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம்
வகைஇந்து சமயப் பண்பாட்டு நிறுவனம்
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூறுகள்22°30′54″N 88°21′58″E / 22.515131°N 88.366204°E / 22.515131; 88.366204ஆள்கூறுகள்: 22°30′54″N 88°21′58″E / 22.515131°N 88.366204°E / 22.515131; 88.366204
நிறுவிய ஆண்டு
29 சனவரி 1938
மைய அமைப்பு
இராமகிருசுண இயக்கம்
சார்புகள்புதிய வேதாந்தம்
வலைத்தளம்sriramakrishna.org
கொல்கத்தாவின் கோல் பூங்காவில் இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனத்தின் உட்புறக்காட்சி[1]

இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம் (The Ramakrishna mission institute of culture (RMIC) இராமகிருஷ்ண இயக்கத்தின் துணை நிறுவனம் ஆகும். இராமகிருஷ்ணரின் நூற்றாண்டுப் பிறந்த நாளை முன்னிட்டு துவக்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனம், கொல்கத்தாவை தலைமையகக் கொண்டு 29 சனவரி 1938 முதல் இயங்கி வருகிறது.[2]

இந்நிறுவனம் அதன் மக்கள் நலத்திட்டங்கள், கல்வி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. மனித வாழ்வின் ஒற்றுமையின் தத்துவத்தின் வலியுறுத்தும் வகையில், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பண்பாட்டுச் செழுமையையும், பண்பாட்டுகளுக்கிடையேயான பாராட்டு மற்றும் புரிதலின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்கு நிறுவனம் முயற்சிக்கிறது.

நிறுவனத்தின் செயல்பாடுகள்[தொகு]

இந்நிறுவனத்தில் மொழிப் பள்ளி, ஒரு பெரிய நூலகம், அருங்காட்சியகம், விவேகானந்தர் ஆவணக் காப்பகம், இராமகிருஷ்ணரின் சன்னதி மற்றும் தியான மண்டபம், வெளியீட்டுத் துறை மற்றும் இந்தியவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல துறைகள் உள்ளன. இந்த நிறுவனம் விரிவுரைகள், கருத்தரங்குகள், வேதாந்த வகுப்புகள், ஆய்வு வட்டங்கள், பேச்சுப் போட்டிகள் மற்றும் சமயம் மற்றும் பண்பாடு நிகழ்ச்சிகளின் அட்டவணையைக் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தில் ஒரு பன்னாட்டு அறிஞர்கள் இல்லம் இணைக்கப்பட்டுள்ளது. இது கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கற்றறிந்த சங்கங்களின் அழைப்பின் பேரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வரும் கல்வி நிறுவனங்களின் விருந்தினர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக ஆய்வு, ஆராய்ச்சி அல்லது இந்தியர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் ஆய்வு வட்டம்[தொகு]

இராமகிருஷ்ண இயக்கத்தின் பண்பாட்டு நிறுவனத்தில் அறிவியலைப் பரப்புவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும், விவேகானந்தா ஆய்வு வட்டம் செயல்படுகிறது. இந்த வட்டம் மாதத்திற்கு ஒருமுறை கூடி, பல்வேறு அறிவியல் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தொடங்குவார்கள் என்று திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சாளர் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையிலான தொடர்பு மூலம் சிக்கல்கள் மேலும் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆய்வுக்கூடம் அல்லாத ஆராய்ச்சி மையத்தை அமைப்பது, கருத்தரங்களை ஏற்பாடு செய்தல், சுகாதாரம் பற்றிய பொதுவான விழிப்புணர்வை அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடையே பரப்புதல் மற்றும் பிரபல அறிவியல் அமைப்புகளுடன் ஒத்துழைத்தல்.

இளையோர் விவேகானந்தர் படிப்பு வட்டம்[தொகு]

இம்மையத்தில் அமைந்துள்ள நூலகத்தில் சிறுவர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். ஒவ்வொரு மாதமும் சில குறிப்பிட்ட தலைப்புகளின் அடிப்படையில், இளையோர் படிப்பு வட்ட உறுப்பினர்களால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாதாந்திர நிகழ்ச்சிகளுடன், உறுப்பினர்கள் சுதந்திர தினம் (ஆகஸ்டு 15) மற்றும் குடியரசு தினம் (ஜனவரி 26) போன்ற சிறப்பு நிகழ்வுகளில் நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்..

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. php "RMIC Institution" Check |url= value (உதவி).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. admin. "The Institute". RKM Institute of Culture (ஆங்கிலம்). 2021-01-28 அன்று பார்க்கப்பட்டது.

வெள் இணைப்புகள்[தொகு]