கமர்புகூர்

ஆள்கூறுகள்: 22°55′N 87°39′E / 22.91°N 87.65°E / 22.91; 87.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமர்புகூர்
கிராமம்
கமர்புகூர் is located in மேற்கு வங்காளம்
கமர்புகூர்
கமர்புகூர்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கமர்புகூர் கிராமத்தின் அமைவிடம்
கமர்புகூர் is located in இந்தியா
கமர்புகூர்
கமர்புகூர்
கமர்புகூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°55′N 87°39′E / 22.91°N 87.65°E / 22.91; 87.65
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,121
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்712612
தொலைபேசி குறியீடு03211
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:IN
இணையதளம்https://kamarpukurjayrambati.com/

கமர்புகூர் (Kamarpukur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்லி மாவட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த ஊராகும். இந்த கிராமம், மாவட்டத் தலைமையிடமான கூக்ளி-சூச்சுரா நகரத்திற்கு மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்திற்கு 3 மைல் மேற்கே அன்னை சாரதா தேவி பிறந்த ஜெயராம்பதி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு கிழக்கே 30 மைல் தொலைவில் தாரகேஷ்வரர் கோயில் உள்ளது.

நடுவில் இராமகிருஷ்ணர் வாழ்ந்த இல்லம். இடது பக்கத்தில் குடும்பக் கோயில். வலது பக்கத்தில் இராமகிருஷ்ணர் பிறந்த வீடு

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கமர்புகூர் கிராமத்தின் மக்கள் தொகை 3,121 ஆகும். அதில் ஆண்கள் 1,592 (51%) மற்றும் பெண்கள் 1,529 (49%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 285 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.21% ஆகவுள்ளது.[1]

கல்வி நிலையங்கள்[தொகு]

  • சிறீ இராமகிருஷ்ணா சாரதா கல்லூரி[2]
  • இராமகிருஷ்ணா மிஷன் மேனிலைநிலைப்பள்ளி
  • நாராயண்தாரா மகளிர் மேனிலைப்பள்ளி
  • செயிண்ட் தாமஸ் இடைநிலைப் பள்ளி

போக்குவரத்து[தொகு]

மாநில நெடுஞ்சாலை எண் 7 கமர்புகூர் கிராமம் வழியாகச் செல்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமர்புகூர்&oldid=3746624" இருந்து மீள்விக்கப்பட்டது