மதுராநாத் விஸ்வாஸ்
Appearance
ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சீடரான மதுராநாத் விஸ்வாஸ் கிழக்கு வங்காளத்தில் உள்ள குல்னா மாவட்டத்தில் பிறந்தவர். இவர் வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூருடன் இந்துக் கல்லூரியில் படித்தவர். ராணி ராசமணி, ராஜ்சந்திரர் தம்பதியினரின் மூன்றாவது மகள் கருணாமயியை மணந்தவர். இவர் மதுர்பாபு என்று அழைக்கப்பட்டார்.[1]தேவி தமது தேவைகளை நிறைவேற்றவல்லவர்களாக காட்டியதாக ராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிட்ட ஐவரில் முதலாமர் இவர்.[2]