சுவாமி அத்வைதானந்தர்
Appearance
சுவாமி அத்வைதானந்தர் | |
---|---|
சுவாமி அத்வைதானந்தர் | |
பிறப்பு | 1828 கல்கத்தா; ராஜ்பூர் |
இறப்பு | 1909 டிசம்பர் 28 கல்கத்தா |
இயற்பெயர் | கோபால் சந்திர கோஷ் |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
சுவாமி அத்வைதானந்தர் (1828 - 1909 டிசம்பர் 28) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் கோவர்த்தன கோஷ்.கோபால் சந்திர கோஷ் 1884 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். இவர் தமது குருவை விட எட்டு வயது மூத்தவர். தமது குருவால் ’மூத்த கோபால்’ என்றும் மற்ற சீடர்களால் ’கோபால் அண்ணன்’ என்றும் அழைக்கப்பட்டார். வீட்டு நிர்வாகங்களில் திறமையானவர்.தங்கள் குருவின் மகாசமாதிக்குப் பின்னர் சுவாமி விவேகானந்தராலும் மற்ற சீடர்களாலும் பத்து லிட்டர் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 582-603