ஆகஸ்டு 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஆகஸ்ட் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXII | ||||||
ஆகஸ்டு 19 கிரிகோரியன் ஆண்டின் 231வது நாளாகும். நெட்டாண்டுகளில் 232வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1862 - மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.
- 1895 - கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.
- 1915 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1919 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
- 1934 - ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.
- 1945 - ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.
- 1946 - கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1953 - பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
- 1960 - சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.
- 1980 - சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
- 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 2002 - ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு வானூர்தி செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1871 - ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)
- 1918 - சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999)
- 1929 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2008)
- 1931ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (இ. ஆகஸ்ட் 30, 2001)
- 1946 - பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர்
[தொகு] இறப்புகள்
- 1905 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1825)
- 1934 - ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (1898)
- 1962 - இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)
[தொகு] சிறப்பு நாள்
- ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)
- உலகப் புகைப்பட நாள்