உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்தூர் பூங்கா

ஆள்கூறுகள்: 13°10′21″N 80°14′52″E / 13.17240°N 80.24788°E / 13.17240; 80.24788
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தூர் பூங்கா
Map
வகைநகர்ப்புற பூங்கா
அமைவிடம்மாத்தூர் எம்எம்டிஏ, சென்னை, இந்தியா
ஆள்கூறு13°10′21″N 80°14′52″E / 13.17240°N 80.24788°E / 13.17240; 80.24788
பரப்பளவு2.5 ஏக்கர்கள் (1.0 ha; 0.010 km2)
உருவாக்கம்2012
வடிவமைப்பாளர்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
மேலாண்மைபெருநகர சென்னை மாநகராட்சி
திறந்துள்ள நேரம்21 செப்டம்பர் 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-09-21)
நிலைதிறந்துள்ளது

மாத்தூர் பூங்கா (Maaththoor MMDA Park) என்பது தமிழ்நாடு, சென்னை மாத்தூர் எம்எம்டிஏ அருகே உள்ள நகர்ப்புற பூங்கா ஆகும்.

வரலாறு

[தொகு]

1990-களின் தொடக்கத்தில் மாத்தூர் கிராமத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வீட்டுவசதி குடியிருப்பினைத் தொடங்கியபோது, பூங்கா அமைக்கத் திட்டத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2011 வரை, மாத்தூர் கிராம ஊராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பிறகு, பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் குப்பைக் கிடங்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காவை உருவாக்குவதற்காக இந்த இடத்தினைச் சுத்தம் செய்து 2012 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் பூங்காவைத் திறந்து வைத்தார்.[1]

அமைவிடம்

[தொகு]

மாத்தூர் பூங்கா, மாத்தூர் பேருந்து முனையம் அருகே, 2வது பிரதான சாலை மற்றும் 3வது குறுக்குத் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது.

பூங்கா

[தொகு]

இந்தப் பூங்கா 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2][3] பூங்காவில் சறுக்கு வளையம், விளையாட்டுப் பகுதி, தயார்ப்படுத்தும் பகுதியுடன் கூடிய விளையாட்டரங்கம், 8 வடிவ நடைபாதைகள், கூழாங்கல் நிறைந்த நடைபாதை, தியான மண்டபம் போன்றவை உள்ளன. இந்த பூங்கா சென்னையின் முதல் 10 பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். வட சென்னை பகுதியின் மிகப்பெரிய பூங்காவாகும்.

அருகில் உள்ளன

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jayalalithaa to open Mathur MMDA Poonga on Wednesday". Retrieved 26 October 2016.
  2. "Chennai patrol: Greater Chennai goes to polls - Beneath smooth new roads, old troubles fester". Retrieved 26 October 2016.
  3. "list of osr.pdf" (PDF). Chennai Corporation. Retrieved 12 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தூர்_பூங்கா&oldid=3458399" இலிருந்து மீள்விக்கப்பட்டது