சென்னை பூங்காக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மண்டலம் மரங்களின் அடர்த்தி (sq km)
(as of 2018)[1]
திருவொற்றியூர் 2.47
Manali 4.26
மாதவரம் 5.42
தண்டையார்பேட்டை 1.82
ராயபுரம் 2.79
திரு. வி. க. நகர் 3.3
அம்பத்தூர் 4.82
அண்ணா நகர் 5.28
தேனாம்பேட்டை 5.83
கோடம்பாக்கம் 3.87
வளசரவாக்கம் 2.6
ஆலந்தூர் 2.69
Adyar 12.06
பெருங்குடி 1.9
சோழிங்கநல்லூர் 5.13
மொத்தம் 64.06

2018 ஆம் ஆண்டில், நகரின் பசுமைப்பகுதி 14.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2011 இல் 4.5 சதவீதமாக இருந்தது.[2] நகரத்தின் தனிநபருக்கான பசுமைப் பகுதி 8.5 சதுர மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ள நகர்ப்புறங்களின் பசுமைப் பகுதி 9 சதுர மீட்டர் என்பதற்கும் குறைவாகவே உள்ளது.[3]

டிசம்பர் 2016 ல் வார்தா புயல் காரணமாக 100,000 மரங்கள் அழிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டளவில், நகரத்தில் மரங்களின் அடர்த்தி 64.06 சதுர கிலோ மீட்டர் அளவு இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது முழு நகரத்தின் 15 சதவீதத்திற்கும் மேலாகும். நகரத்தில் மரங்களை விட மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இனங்களான பெருங்கொன்றை, புங்கை, வேம்பு, செம்மயிற்கொன்றை, மழை மரம், மற்றும் வெப்பமண்டல வாதுமை போன்றவைகள் அதிக அளவில் உள்ளன.

34.58 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள திறந்தவெளி பரப்பளவு கொண்ட இவற்றில், 94 மரபு மற்றும் 42 குடும்பங்களில் 121 வகை மரங்கள் உள்ளன. தேனாம்பேட்டை மண்டலம் 68 வகையான மரஙளுடன் மிகவும் மாறுபட்டதாக உள்ளது, 38 வகையான இனங்கள் மட்டுமே மணலி மண்டலத்தில் உள்ளது. 51 பூங்காக்களுடன், அடையார் நகரம் மிக அதிகமான பூங்காக்கள் கொண்டதாக விளங்குகிறது, மேலும் திருவொற்றியூர் மண்டலத்தில் 4 பூங்காக்கள் என்ற குறைந்த அளவே உள்ளது.[1] சென்னையின் பசுமைப் பகுதிகளின் பங்கினில், கிண்டி தேசிய பூங்கா மிக அளவில் ஆதிக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது, இது 2.71 சதுர கிலோ மீட்டர் என்ற பரப்பளவில் உள்ளது. இது அடையாறு ஆற்றின் தெற்கே ஒரு பரந்த பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.

மண்டல அளவிலான எண்ணிக்கை[தொகு]

டிசம்பர் 2014 வரையில், இந்த நகரத்தில் சுமார் 396 பூங்காக்கள் இருந்தது.[4] 2011 வரை, பழைய மாநகராட்சி வரம்புகளில் ஏழு மண்டலங்கள் 260 பொது பூங்காக்கள், 154 நடைப் பயிற்சிப் பூங்காக்கள் மற்றும் 103 மத்திய பூங்காக்கள், சென்னை கார்ப்பரேஷனின் பூங்கா துறையால் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது,[5] இதில் பல பூங்காக்கள் மோசமான பராமரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் புதிதாக சேர்க்கப்பட்ட எட்டு மண்டலங்களில் 265 இடங்களைக் கொண்டுள்ளன, இவற்றில் புதிய பூங்காக்களின் வளர்ச்சிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.[6] 358 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்காப்பியா பூங்கா நகரத்தில் உள்ள பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். இது அடையாறு ஆற்றின் கரையோரத்தின் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலை மீட்பதற்காக உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி[தொகு]

சென்னையின் பசுமைப் பகுதியானது நீர்த்தடம், வனப்பகுதி, பிரெய்லி புல்வெளிகள், ஈர நிலப்பகுதிகள், கால்வாய்கள், நீரோடைகள், மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் வெளிப்புற இடைவெளிகளால் மேலும் வளர்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், நகரத்தில் பூங்காக்களை பராமரிப்பதற்கான நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 350 ஆக இருந்தது. இது நாளது வரை மாற்றியமைக்கப்படவில்லை.[7]

அதிகரிக்கும் பூங்காக்கள்[தொகு]

2011 வரை, நகரங்களில் 260 பூங்காக்கள் இருந்தன. அடுத்த ஆண்டில், 200 புதிய பூங்காக்கள் திறக்க முன்மொழியப்பட்டன. 2014 ஜனவரியில் இதில் ஏழு பூங்காக்கள் திறக்கப்பட்டன, மீதமுள்ளவை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்தன. டிசம்பர் 2014 ல், சுமார் 396 பூங்காக்கள் இருந்தன.[8] 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை மாநகராட்சி, நகரில் 100 புதிய பூங்காக்களை உருவாக்க 440 க்கும் மேற்பட்ட திறந்த வெளி இடங்களை (OSR) கண்டறிந்தது. மாநகராட்சி மார்ச் 2015 வாக்கில் நகரில் குறைந்தபட்சம் 560 பூங்காக்கள் வேண்டும் என திட்டமிட்டது. இதுடெல்லி (1,500), மும்பை (1,300), பெங்களூரு (721), ஹைதராபாத் இந்தியா (709) ஆகியவற்றின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கும்.[9]

பூங்காக்கள் பட்டியல்[தொகு]

சென்னை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டுகளிலும் பூங்காக்களின் எண்ணிக்கையை காட்டும் வரைபடம்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Tree cover in city is only around 15%". The Hindu. 11 February 2018. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tree-cover-in-city-is-only-around-15/article22719066.ece. பார்த்த நாள்: 11 February 2018. 
  2. Janardhanan, Arun (9 May 2011). "Massive afforestation drive to begin in Chennai". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-05-09/chennai/29524468_1_saplings-d-narasimhan-neem-tree. பார்த்த நாள்: 11 Jun 2011. 
  3. Lopez, Aloysius Xavier (31 August 2018). "A Rs.228-cr. project to take city’s green cover to 20%". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/a-228-cr-project-to-take-citys-green-cover-to-20/article24824653.ece. பார்த்த நாள்: 2 September 2018. 
  4. TNN (6 May 2010). "Green & brown: 2 shades of parks". The Times of India (The Times Group). http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Green-brown-2-shades-of-parks-17122014002011. பார்த்த நாள்: 25 Dec 2014. 
  5. "Parks". Corporation of Chennai (nd). பார்த்த நாள் 5 Aug 2012.
  6. Lopez, Aloysius Xavier (30 March 2012). "More green relief for Chennai soon". The Hindu (The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article3259316.ece. பார்த்த நாள்: 13 Jul 2012. 
  7. Frederick, Prince (28 August 2002). "With a dash of glamour...". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/thehindu/mp/2002/08/28/stories/2002082800200100.htm. பார்த்த நாள்: 12 May 2013. 
  8. TNN (6 May 2010). "Green & brown: 2 shades of parks". The Times of India (Chennai: The Times Group). http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Green-brown-2-shades-of-parks-17122014002011. பார்த்த நாள்: 25 Dec 2014. 
  9. Divya, Chandrababu (8 July 2014). "Chennai to get 100 new parks". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/City/Chennai/Chennai-to-get-100-new-parks/articleshow/38027233.cms. பார்த்த நாள்: 9 Aug 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_பூங்காக்கள்&oldid=2726429" இருந்து மீள்விக்கப்பட்டது