மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°03′15″N 80°17′01″E / 13.05418°N 80.28368°E / 13.05418; 80.28368
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: Migrating 8 interwiki links, now provided by Wikidata on d:q673659 (translate me)
வரிசை 52: வரிசை 52:


[[பகுப்பு:சென்னைக் கடற்கரைகள்]]
[[பகுப்பு:சென்னைக் கடற்கரைகள்]]

[[bn:মেরিনা সমুদ্র সৈকত]]
[[de:Marina Beach]]
[[en:Marina Beach]]
[[hi:मरीना बीच (चेन्नई)]]
[[id:Marina Beach]]
[[ml:മറീന ബീച്ച്]]
[[te:మెరీనా బీచ్]]
[[zh:游艇码头海滩]]

21:03, 7 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மெரீனா கடற்கரை
காமராஜர் சாலை நெடுகிலும் மெரீனா கடற்கரை.
இருப்பிடம்இந்தியா சென்னை, இந்தியா
கடற்கரைகோரமண்டல், வங்காள விரிகுடா
வகைநகர்ப்புற, மணல் கடற்கரை
உருவாக்கம்1884
மொத்த நீளம்13 km (8.1 mi)
உலாவும் சாலை நீளம்6 km (3.7 mi)
அதிகபட்ச அகலம்437 m (1,434 அடி)
நோக்குநிலைவடக்கு-தெற்கு
குறிப்பிடத்தக்க அடையாளங்கள்கலங்கரை விளக்கம், அண்ணா நினைவகம், எம்.ஜி. ஆர் நினைவகம், நேப்பியர் பாலம்
நிர்வாக அதிகாரம்சென்னை மாநகராட்சி

மெரீனா கடற்கரை (Marina beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

1913 ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை

வரலாறு

சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரினா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது.

நிகழ்வுகள்

சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் தூறைகளின் அணிவரிசை நடைபெறும்.

போக்குவரத்து

மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.

எழில்மிகு காட்சிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_கடற்கரை&oldid=1341298" இலிருந்து மீள்விக்கப்பட்டது