கருப்புக் கவுனி
| கருப்புக் கவுனி |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 150 - 170 நாட்கள் |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
கருப்புக் கவுனி (Karuppuk kavuṉi) என்பது ஒரு மரபார்ந்த நெல் வகையாகும். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தக்குடி எனும் நாட்டுப்புறப் பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[1] இது சோறு ஆக்குவதற்கு அல்லாமல் பலகாரங்கள் செய்யவே அதிகமாகப் பயன்படுகிறது எனக் கூறப்படுகிறது.[1]
கால அளவு
[தொகு]
கருப்புக் கவுனி ஒரு நீண்டகால நெற்பயிர். இது ஏறத்தாழ ஆறுமாத காலத்தின் முடிவில் (150 - 170 நாட்கள்) அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும்.[1]
தற்போதைய புழக்கத்தில்:
[தொகு]1) நாட்டுக் கருப்பு கவுனி
2) செட்டிநாட்டு கவுனி
3) பர்மா கவுனி
4) தாய்லாந்து கவுனி
5) அசாம் கவுனி
6) இரசாயன கவுனி
இத்தனை வகைகள் புழக்கத்தில் உள்ளது. நபார்டு வங்கியின் சார்பாக ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து வகையான கவுனிகளையும் ஆய்வு செய்து நாட்டுக் கருப்பு கவுனியில் மிகச் சிறந்த சத்துக்கள் உள்ளது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக டெல்டா மாவட்டத்தில் விளையக்கூடிய நாட்டுக் கருப்பு கவனிக்கு கூடுதலான சிறப்பு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது
மற்ற கவுனிகள் எல்லா பருவத்திலேயும் விளையக்கூடிய தன்மை உள்ளதுஆனால் நாட்டுக் கருப்பு கவுனி என்று சொல்லக்கூடிய ரகம் மட்டும்தான் சம்பா பட்டத்தில் இயற்கையோடு ஒன்றி அதன் முழு பலன்களையும் கொடுக்கிறதுஅதுதான் தூய்மையான மழை நீரிலும் சரியான பருவத்திலும் பட்டத்திலும் விளையக்கூடிய தன்மை உடையதுஆராய்ச்சிகள் செய்யப்பட்ட கவனியில் நாட்டுக் கருப்பு கவனிக்குதான் நோய் தீர்க்கும் தன்மைகள் உடையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
பருவகாலம்
[தொகு]இந்நெல்லை விளைவிக்க, நீண்டகாலம் பயிரிடக்கூடிய சனவரி மாதம் தொடங்கும் நவரைப் பருவமும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவமும் ஏற்றதாகக் கூறப்படுகிறது.[1] இப்பருவத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்படுவதாக அறியப்படுகிறது.
வளருகை
[தொகு]கருப்புக் கவுனி நேரடி விதைப்பு முறைக்கு ஏற்ற நெற்பயிர். பசுந்தாள், பசுந்தழை, சிதைவடைந்த இயற்கை உரங்களைக் கொண்டு வேளாண்மை செய்ய உகந்தாகக் கருதப்படுகிறது. மேலும், மட்டற்ற களைப்புத் திறனோடு அதிகக் கதிர் எடுக்கும் தன்மையுடைய இந்த நெல் இரகம், சாயாத ஆற்றல் உடையதாகும். கருப்புக் கவுனி நெற்பயிர் ஒப்பிடத்தக்களவில் நீர் குறைந்த உலர் நிலங்களிலும், கரிசல், செம்மண் நிலப்பகுதிகளிலும் செழித்து வளரும்.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- 1 2 3 4 5 6 "Traditional Varieties grown in Tamil nadu - Karuppukavuni". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. Retrieved 2017-01-30.
- ↑ மருத்துே குணங்கள் உள்ள பாரம்பாிய நெல் ரகங்கள் பரவலாக்க அறிவுறுத்தல்