காட்டுப் பொன்னி (நெல்)
காட்டுப் பொன்னி |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
135 - 140 நாட்கள் |
மகசூல் |
சுமார் 1440 கிலோ ஒரு ஏக்கர் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட சிறந்த இராகமான இது, மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. 140 நாள் வயதுடைய இவ்வகை நெல்லும் அரிசியும், சிவப்பு நிறத்தில் உள்ள மோட்டா (தடித்த) இரகமாகும். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இராகமான இது, ஒரு மாதம் வரையிலும் தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும்.[1]
சாகுபடி முறை
[தொகு]இடுபொருளான அடியுரம், மேலுரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவைகள் தேவையற்றதாக உள்ள இவ்வகை நெற்பயிருக்கு, பூச்சி தாக்குதல், மற்றும் களை தொந்தரவு போன்றவை இல்லை என கருதப்படுகிறது. ஏக்கருக்கு சுமார் 20 மூட்டைவரை (75 கிலோ) மகசூல் கிடைக்கக்கூடிய இந்நெல் இரகம், அறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் கூடி, நுண்ணுயிரின் வளம் பெருகுவதாகவும், மேலும் மண்புழு எண்ணிக்கை அதிகரித்து மகசூல் பெருக்குவதாகவும் கூறப்படுகிறது.[1]
நற்குணங்கள்
[தொகு]காட்டுப் பொன்னியின் அரிசியில் நார்ச் சத்து (Crude fiber), புரதச் சத்து (Protein), மற்றும் கல்சியம் அதிகம் உள்ளதாகவும் எனவே, இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும் எனப்படுகிறது. மேலும் நெற்பயிரின் வைக்கோலைத் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும் கருத்துள்ளது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "ஊடுபயிர் நெல்- நம் நெல் அறிவோம்!". தி இந்து (தமிழ்) - மார்ச் 07, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-21.