ஓ ஆர் எஸ் - 11 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ ஆர் எஸ் - 11
OR-ORS-11
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டி - 141 x டி ஆர் - 8 - 246
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
வெளியீடு
1975
மாநிலம்
ஒரிசா
நாடு
 இந்தியா

ஓ ஆர் எஸ் - 11 (ORS-11) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 141 (T-141) எனும் நெல் இரகத்தையும், டி ஆர் - 8 - 246 (IR-8-246) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மானாவாரி மற்றும் கடலோர உவர்ப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 80 சென்டிமீட்டர் (80 cm) குள்ளப் பயிராகும். நீண்ட மற்றும் தடித்த தானியத்தை கொண்டுள்ள இவ்வகை நெற்பயிர், ஒரிசா மாநில கடலோரப் பிராந்தியங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

குறிப்பு[தொகு]

ஓ ஆர் எஸ் - 11 (ORS-11) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_ஆர்_எஸ்_-_11_(நெல்)&oldid=3237389" இருந்து மீள்விக்கப்பட்டது