உள்ளடக்கத்துக்குச் செல்

கார் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கார் நெல் (Kar) புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமான இது, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக் கிரகித்துக்கொண்டு செழித்து வளரக்கூடியது.[1] மேலும், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த இரகம். சிவப்பு நிற நெல்லும், வெள்ளை அரிசியும் உடையது, நடவு செய்ய மட்டுமே ஏற்ற இரகமாக உள்ள இது, பயிர் வளர்ந்து பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர் நிரம்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இந்த நெல் இரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர் முற்றி முழு வளர்ச்சி அடைந்து விளையக்கூடியது. இதன் வைக்கோல் அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில் இருந்தாலும் அழுகுவதில்லை.[2]

அகத்தியர் குணபாடம்

[தொகு]

காரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்
பாரறிய வாயுவையும் பண்ணுங்காண் – நேரே
கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த
உரப்பாகும் என்றே யுரை.

மேற்கூறிய பாடலின் பொருளானது, மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தருவதாகவும், இதனால் கரப்பான் நோய்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "அரிசி வகைகளும், அதன் குணங்களும்". thamil.co.uk (தமிழ்) - 3. Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-11. {{cite web}}: Cite has empty unknown parameters: |5= and |6= (help)
  2. "தண்ணீருக்கு அஞ்சாத கார்நெல்". தி இந்து (தமிழ்) - சனவரி 31, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
  3. "சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்_(நெல்)&oldid=3722406" இலிருந்து மீள்விக்கப்பட்டது