ஐ இ டி - 2233 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஇடி-2233
IET-2233
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பெல்லா பாட்னா x ஐஆர்-8
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
4000 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
நாடு
 இந்தியா

ஐ இ டி - 2233 (IET-2233) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்திய, மற்றும் நீண்டகால, நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 110 - 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] பெல்லா பாட்னா (Bella Patna) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வண்டல் மண், மற்றும் தெராய் பிராந்தியங்களில் நன்கு சாகுபடி செய்யப்படுகிறது.

அரைக்குள்ளப் பயிராக வளரக்கூடிய இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்தும், இதன் அரிசி வெண்ணிறத்திலும உள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் திறன்கொண்ட இந்த நெல் இரகம், வடஇந்தியப் பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2][3]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. IET-2233 - Notified Rice Varieties in West Bengal, India
  3. "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_இ_டி_-_2233_(நெல்)&oldid=3597359" இலிருந்து மீள்விக்கப்பட்டது