வரப்புக் குடைஞ்சான் (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரப்புக் குடைஞ்சான்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வரப்புக் குடைஞ்சான் (Varappu Kudainchan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘சத்திரகுடி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதகாலப் பயிராகும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ முதல், 1200 கிலோ வரையில் மகசூல் தரக்கூடிய இந்த நெல் வகை, கேரளா மாநிலத்தில் அதிக விலையாக உருபாய் (र) 7.50/கிலோ விலையைப் பெறுகிறது.[1]

பெயர் மரபு[தொகு]

இவ்வகை நெற்பயிர்களின் வேர்கள் வரப்பு முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப் பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.[2]

பருவகாலம்[தொகு]

பொதுவாக இந்நெல் இரகம் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதே பின் சம்பா பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீண்டகால வகை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.[3]

வளருகை[தொகு]

மானாவாரி நிலம் எனப்படும் புன்செய் நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய வரப்புக் குடைஞ்சான், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.[1]

  • வரப்புக் குடைஞ்சான் நெல்லின் மேல் தோல் கருப்பு நிறமாகவும், அதன் அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]