பிசினி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசினி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 – 120 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

பிசினி (Pisini) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட இரகமாகும். நூற்றி இருபது நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த வகை நெல்லின் அரிசி மோட்டாவாகவும், சிவப்பு நிறமும் கொண்டது. எவ்வகை மண்ணையும் ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், ஐந்தடி உயரம்வரை வளரும் தன்மையுள்ளது. கடும் வறட்சியையும், அதேநேரம் பெருவெள்ளத்தையும் தாங்கி செழிக்கும் இது, ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை (75 கிலோ மூட்டை) வரை மகசூல் கொடுக்கக்கூடியதாகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நடவு முறைக்கும் ஏற்ற இந்த நெல்வகை, தொழு உரம் மட்டும் இட்டால் போதும். மிக எளிமையாகச் சாகுபடி செய்யகூடிய, பூச்சி தாக்குதல் அற்றது.[2]

உளுந்து, மற்றும் பிசினி நெல்லின் அரிசி கலந்து களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்குவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதாகவும் கருதப்படுகிறது. பெண்களின் பேறுகாலத்தில், பிசினி அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்தால், சுகப்பிரசவத்துக்கு உதவுதாகவும், மற்றும் இந்நெல்லை அவல் செய்து சாப்பிடச் சுவையாகவும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டதுமாகவும் கருதப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. nammanellu - Pisini
  2. 2.0 2.1 "நம் நெல் அறிவோம்: கொழுப்பைக் குறைக்கும் பிசினி". தி இந்து (தமிழ்). ஆகத்து 15, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசினி_(நெல்)&oldid=3601739" இலிருந்து மீள்விக்கப்பட்டது