கோ ஆர் எச் - 4 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஆர்எச்-4
CORH-4
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சிஎம்எஸ்-23-ஏ x சிபி-174-ஆர்
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
2011
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

கோ ஆர் எச் 4 (CORH 4) என்பது; வீரியம் மிகுந்த ஒட்டு நெல் வகையாகும். சிஎம்எஸ் 23ஏ (CMS 23A) என்ற நெல் இரகத்தையும், சிபி 174 ஆர் (CB 174 R) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்டுச் சேர்த்து கிடைக்கப்பெறும் நெல் வகையான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய மத்திகால நெல் வகையாகும்.[1] செப்டம்பர் - ஒக்டோபர் மாதம் வரையிலான, பின் சம்பா / பிசாணம் எனப்படும், தாளடிப் பட்டத்தில்[2] (பருவத்தில்) பயிரிட ஏற்ற இரகமான கோ ஆர் எச் 4, ஒரு எக்டேருக்கு 7348 கிலோ - 11250 கிலோ வரையில் தானிய மகசூல் கிடைக்கக்கூடிய நெல் இரகமாகும்.[3]

அறிமுகம்[தொகு]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 2011 ஆம் ஆண்டு கண்டறிந்து வெளியிடப்பட்ட இந்த கோ ஆர் எச் 4 நெல் இரகம், மத்திய சன்னாமான வெள்ளை நிற அரிசியை கொண்டதாகும்.[4]

ஏற்ற இடங்கள்[தொகு]

இவ்வகை நெல்லை தமிழ்நாட்டில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களிலும் பயிரிட உகந்த இடங்களாக கருதப்படுகிறது.[5]

பண்புகள்[தொகு]

கலப்பின நெல் இரகமான கோ ஆர் எச் 4, குலை நோய், துங்ரோ மற்றும் பழுப்பு புள்ளி நோய் போன்றவைக்கு எதிர்ப்பு திறனும், பச்சை தத்து பூச்சி, வெண் முதுகு தத்துப் பூச்சி, இலையுறை அழுகல், இலையுறை கருகல் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத்திறனும் கொண்டதாகவும் கூறப்படுகிறது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ_ஆர்_எச்_-_4_(நெல்)&oldid=3722488" இருந்து மீள்விக்கப்பட்டது