அம்பை - 14 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பை - 14
ASD 14
வேளாண் பெயர்
பென்னை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டீ என் - 1 x ஏஎஸ்டி - 1
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 105 நாட்கள்
மகசூல்
4800 கிலோஎக்டேர்
வெளியீடு
1970
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அம்பை - 14 (ASD 14) பிரபலமாக பென்னை (Pennai) எனப்படும் இந்த நெல் வகை, டீ என் - 1 நெல் இரகத்தையும், அம்பை - 1 நெல் இரகத்தையும், (TN 1 / ASD 1) இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1970 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்[தொகு]

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 14 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 4800 கிலோவரை ( 4.8 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், சாகுபடி செய்ய கார் பருவம் மிகவும் உகந்தது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் மிதமான தடித்த வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 14". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_14_(நெல்)&oldid=3793721" இலிருந்து மீள்விக்கப்பட்டது