அம்பை - 12 (நெல்)
அம்பை - 12 ASD 12 |
---|
வேளாண் பெயர் |
ஒட்டு ஆனைக்கொம்பன் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
160 - 165 நாட்கள் |
மகசூல் |
4500 கிலோஎக்டேர் |
வெளியீடு |
1964 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
அம்பை - 12 (ASD 12) பிரபலமாக ஒட்டு ஆனைக்கொம்பன் (Ottu anaikomban) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் (மற்றொரு மூலத்தின்படி, பீ டீ பி - 15 / ஜி இ பி - 24 (PTB 15 / GEB 24) என இரு நெல் வகைகளை இணைத்து[1]) உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
வெளியீடு
[தொகு]தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[1] 1964 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
காலம்
[தொகு]நீண்டக்கால நெற்பயிர்களில் ஒன்றான இது, 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[2] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 12 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[1]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை (4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர், பிசாணப் பருவத்தில் அதிக விளைச்சல் தரக்கூடியது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமெல்லிய சன்ன வடிவில் உள்ளது.[2][1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Rice Knowledge Management Portal ASD 12". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)