வெள்ளைப்பொன்னி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளைப்பொன்னி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
120 - 140 நாட்கள்
தோற்றம்
பழைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிலிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும்.[1]

பருவகாலம்[தொகு]

120 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி,[2] யூலை மாதம் முதல், ஆகத்து மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான பின் சம்பா (தாளடி) பருவத்திலும், சாகுபடி செய்ய தகுந்த நெல் இராகமாகும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Improved white ponni rice variety". தி இந்து (ஆங்கிலம்) - மே, 18, 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
  2. தமிழ்நாட்டின் நெல் இரகங்கள்
  3. பாரம்பரிய நெல் இராகங்களின் பட்டங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்பொன்னி_(நெல்)&oldid=3722424" இலிருந்து மீள்விக்கப்பட்டது