உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டச்சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கட்டச் சம்பா (Katta Samba) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். பாரம்பரிய நெல் வகைகளில் மிகவும் குள்ள இரகமாக இருப்பதால், கட்டச்சம்பா என்றழைக்கப்படுகிறது. இந்தப் நெற்பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஒரு ஏக்கருக்கு முப்பது மூட்டைக்கு மேல் மகசூல் தரக்கூடியது.[1]

சிறப்பு

[தொகு]

கட்டச்சம்பா நெல் இரகம், பருவநிலை மாற்றத்திலிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் மீளக்கூடிய நெல் இரகங்களில் முதன்மையானது. உடலுக்கு வலுசேர்க்கும் வகையில் முதன்மையானதாக இந்நெல் இரகம் இருந்துள்ளது. இதன் அரிசி சோற்றினை மண்பானயில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் அருந்துவது உடலுக்கு நன்மைதரும்.[1]

இந்த நெல் இரகத்தைப் பயிரிடுவதன் மூலம், குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.

குறிப்புகள்

[தொகு]

1966 ஆம் ஆண்டில் ஐம்பத்து எட்டு கிலோ எடை கொண்ட நான்கு மூட்டை நெல்லை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் வாங்குவதற்கு இருபத்து ஒன்பது மூட்டை நெல்லுக்கான பணம் தேவைப்படும். நெல் விற்பனை தங்கத்தினுடைய விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "நம் நெல் அறிவோம்: தங்கத்துக்கு இணையான கட்டச்சம்பா". தி இந்து (தமிழ்) - ஏப்ரல் 25, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டச்சம்பா_(நெல்)&oldid=3722442" இலிருந்து மீள்விக்கப்பட்டது