களர் பாலை (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களர் பாலை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
110 - 120 நாட்கள்
மகசூல்
1200 - 1300 கிலோ ஒரு ஏக்கர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

களர் பாலை (Kalar palai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 - 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1300 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]

பருவகாலம்[தொகு]

120 நாட்கள் வயதுடைய குறுகியகால நெற்பயிரான களர் பாலை, “நவரை பட்டம்” எனும் பருவத்தில் பயிரிடப்படுகிறது.[1] மேலும் டிசம்பர் முதல், சனவரி முடிய உள்ள இடையேயான நாட்களில் தொடங்கக்கூடிய இப்பட்டத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர், விழுப்புரம், மற்றும் தேனி மதுரை போன்ற மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.[2]

வளருகை[தொகு]

காரத்தன்மை உடைய களர் நிலங்களை ஏற்று வளரக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியையும் தாங்கக்கூடியது. நாற்று நடவு முறைக்கு ஏற்ற இராகமான இது, பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  • சொரசொரப்பான கடினத்தன்மை வாய்ந்த களர் பாலையின் அரிசி பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் காணப்படுகிறது.
  • உவர்ப்பு நிறைந்த, உப்புத்தன்மை வாய்ந்த களர் நிலங்களில் செழித்து வளர்வதால், இந்த நெல் களர் பாலை எனப்படுகிறது.[1][3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=களர்_பாலை_(நெல்)&oldid=3238931" இருந்து மீள்விக்கப்பட்டது