அம்பை - 9 (நெல்)
| அம்பை - 9 ASD 9 |
|---|
| வேளாண் பெயர் |
| விரைவுச் சம்பா |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நல் விதைத் தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 90 - 95 நாட்கள் |
| மகசூல் |
| 3000 கிலோஎக்டேர் |
| வெளியீடு |
| 1951 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, அம்பாசமுத்திரம் |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
அம்பை - 9 (ASD 9) பிரபலமாக விரைவுச் சம்பா (Avasara samba) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1951 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 90 - 95 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 9 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர், நாற்று முற்றி தாமத நடவுக்கும் உகந்தது.
- இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-05.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 9". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. Retrieved 2017-08-05.
{{cite web}}: Check date values in:|date=(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-08-05.
{{cite web}}: Text "Long duration varieties" ignored (help)