வெள்ளை குறுவை கார் (நெல்)
வெள்ளை குறுவை கார் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
125 - 135 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
வெள்ளை குறுவை கார் (Vellai Kuruvi Kar) பாரம்பரிய நெல் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவ்வகை நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் வட்டாரங்களில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 25 - 30 நாட்கள் (நாற்றங்கால்) நாற்று வளர்ப்பு உட்பட, 125 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சுமார் 100 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும். வெள்ளை குறுவை காரின் தானிய மணிகள், மற்றும் வைக்கோல் ஆகியவை வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து, அழுக்கான வெள்ளை நிறமாகத் தோற்றமளிப்பதாக உள்ளது. மேட்டுப்பாங்கான நிலப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நேரடி விதைப்பு முறைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.[1]
பருவகாலம்[தொகு]
130 - 135 நாட்கள் வயதுடைய இந்த வெள்ளை குறுவை கார் யூலை மாதம் முதல், ஆகத்து மாதம் முடிய உள்ள முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), செப்டம்பர் மாதம் முதல், அக்டோபர் மாதம் முடிவாக உள்ள பின் சம்பா பருவத்திலும் ஏற்றதாகும்.[2][1]
- துார் (கதிர்) வெளிவரும் காலத்தில், இப்பயிரின் தண்டு சுவையாக இருப்பதால், எலிகள் தாக்குதல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
இவற்றையும் காண்க[தொகு]
![]() |
விக்சனரியில் வெள்ளை குறுவை கார் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Traditional Varieties grown in Tamil nadu - vellai_kuruvi_kar". agritech.tnau.ac.in (ஆங்கிலம்). © 2014 TNAU. 2017-01-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]