நீலஞ்சம்பா (நெல்)
நீலஞ்சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
175 – 180 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
நீலஞ்சம்பா (Neelan samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 175 - 180 நாள் வயதுடைய நீலஞ்சம்பா பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]
வளருகை
[தொகு]நீர் சூழ்ந்த நிலைகளில் உள்ள நிலங்களில் செழித்து வளரக்கூடிய இந்த நெல் வகையின் அரிசி, தடித்த பெரு நயத்துடன் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், முற்காலத்தில் படகில் சென்று அறுவடை செய்யப்பட்ட நீலஞ்சம்பா நெற்பயிர்கள்,[3] இலைத் தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை.[1]
குறிப்புகள்
[தொகு]- நீலஞ்சம்பா அரிசிச்சோறு பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
- நீர் சூழ்ந்து காணப்படும், ஏரியின் உட்புற விளிம்புகள், முகத்துவாரப் பகுதிகள், ஓடைகள் போன்ற சதுப்புநிலங்களில் நன்கு வளரக்கூடியது.[4]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Neelan samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-13.
- ↑ பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பாரம்பர்ய அரிசி ரகங்கள் தொலைந்த கதை![தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "67. Neelan samba". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-13.