வைகுண்டா (Vaigunda) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின்நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, நீர்த்தேக்கம் மற்றும் வறட்சி என அனைத்து சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள நெற்பயிர் ஆகும்.[1] நேரடி விதைப்புக்கும், மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்ற நெல் இரகமான இது, 40 நாட்கள் நாற்றங்கால் உட்பட 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது.[2]