கிச்சலி சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தூர் கிச்சலி சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
135 - 140 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா [1]

ஆத்தூர் கிச்சலி சம்பா அல்லது ஆத்தூர் கிச்சடி சம்பா (Attur Kichedi samba) தற்பொழுது சி இ பி - 24 (GEB 24) தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற இரகமாக உள்ள இது, சம்பா பருவத்தில் (ஆகத்து (தமிழ் ஆடி மாதத்தில்) பயிரிடப்படும் பாரம்பரிய நெல் இரகமாகும். நூற்று முப்பத்து ஐந்து நாளில் அறுவடைக்கு வரக்கூடிய இவ்வகை நெற்பயிர்கள், நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. சன்ன இரகமாக உள்ள இதன் அரிசி, வெண்ணிறமாகக் காணப்படுகிறது.[2]

சன்ன இரகம்[தொகு]

பொதுவாக, பலனளிக்காத வெள்ளை, மற்றும் சன்ன (மெலிந்த) இரக அரிசியை விரும்பி சாப்பிட நாம் பழகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியத்துக்குப் சத்து மிகுந்த மோட்டா (தடித்த) இரக அரிசியைத் தவிர்த்து, மெருகேற்றல் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருவதாக கருதப்படுகிறது. ஆனால் வெள்ளை அரிசியாகவும், சன்ன இரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற இரகமாகவும் இந்த கிச்சலி சம்பா உள்ளது.[2]

குருஞ்சிக்கு ஏற்றது[தொகு]

மஞ்சள் நிற நெல்லில், மற்றும் வெள்ளை அரிசியுடைய இந்த நெல் இரகம், மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியில் பயிரிடப்படுகிறது. நாலரை அடி (4.½ ft) வரை வளரும் தன்மை கொண்ட இது, நூற்று முப்பத்து ஐந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. மழை வெள்ளத்திலும் ஓரளவு தாக்குப்பிடித்து, சாயும் தன்மை கொண்டதாக இருப்பினும் அறுவடைக்கும், நெல்லுக்கும் எவ்வொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.[2]

பலனும், பயன்பாடும்[தொகு]

கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும். மேலும், இதன் சோற்றை சாப்பிட்டால் தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும். இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி இரகமாக உள்ள இது, சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சலி_சம்பா_(நெல்)&oldid=3722508" இருந்து மீள்விக்கப்பட்டது