பவானி கோ - 63 (நெல்)
Jump to navigation
Jump to search
பவானி கோ - 63 (நெல்)[தொகு]
பவானி, கோ - 63 (Bhavani (CO-63) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் மத்தியகால நெல் வகையாகும்.[1] 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பேடா (Peta), மற்றும் பி பி ஐ - 76 (BPI-76) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத்தர நீர்ப்பாசன வசதிபெற்ற நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்து காணப்படுகிறது. அரை உயர பயிராகவும், மற்றும் புகையான் நோய்க்கு மிதமாக பாதிக்கப்படும் இது, தென் இந்திய பகுதியான தமிழகத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 45. Bhavani (CO-63)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-17.